Wednesday, July 16, 2025
HomeAny Degree Govt Jobsதமிழ்நாடு அரசு TNPSC குரூப் 2, 2A வேலைவாய்ப்பு 2025 - 645 காலியிடங்கள் ||...

தமிழ்நாடு அரசு TNPSC குரூப் 2, 2A வேலைவாய்ப்பு 2025 – 645 காலியிடங்கள் || ரூ. 22,800 சம்பளம்! TNPSC Group 2 Recruitment 2025

TNPSC Group 2 Recruitment 2025: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 & 2A பிரிவில் காலியாக உள்ள 645 உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர்,
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
Tamil Nadu Public Service Commission
காலியிடங்கள்645
பணிஉதவியாளர், வனவர்,
கீழ்நிலைப் பிரிவு எழுத்தர்,
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
உள்ளிட்ட பல்வேறு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி13.08.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tnpsc.gov.in/

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 2 & 2A வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் விவரம்

பிரிவுபணியிடம்
குரூப் 250
குரூப் 2ஏ595
மொத்தம்645

TNPSC Group 2 பதவி வாரியான காலியிடங்கள் விபரம்

பதவியின் பெயர்காலியிடம்
Assistant Inspector 06
Junior Employment Officer (NonDifferently Abled)01
Junior Employment Officer (Differently Abled)01
Probation Officer02
Probation Officer03
Sub Registrar, Grade-II06
Special Branch Assistant03
Special Branch Assistant05
Assistant Section Officer01
Forester13
Forester09
மொத்தம்50

TNPSC Group 2A பதவி வாரியான காலியிடங்கள் விபரம்

பதவியின் பெயர்காலியிடம்
Senior Inspector65
Assistant Inspector01
Audit Inspector11
Supervisor / Junior Superintendent01
Assistant, Grade III04
Assistant
Chennai (South)
Cuddalore
Madurai
Thiruvarur
Vellore 
Commissionerate of Commercial Taxes

03
01
01
03
02
03
Senior Revenue Inspector
Chennai
Cuddalore
Eorde
Kallakurichi
Nilgiris
Ramanathapuram
Thanjavur
Tirupathur
Tiruvallur
Vellore
Commissionerate of Revenue Administration
 

14
01
04
03
04
02
03
03
03
01
02
Assistant429
Assistant / Accountant02
Executive Officer, Grade III11
Lower Division (Counter) Clerk02
Assistant10
மொத்தம்
595

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கு விண்ணப்பிக்க, பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை (Undergraduate) மற்றும் முதுகலை (Postgraduate) பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். பெரும்பாலான பதவிகளுக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருந்தால் போதுமானது.

01.07.2025 அன்றுள்ளபடி, பல்வேறு குரூப் 2 பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புகள் பின்வருமாறு:

  • நன்னடத்தை அலுவலர் (Probation Officer): 22 அல்லது 26 வயது (பதவியைப் பொறுத்து மாறுபடும்)
  • வனவர் (Forester): 21 வயது
  • சார் பதிவாளர் (Sub-Registrar): 20 வயது
  • இதர பதவிகள்: 18 வயது

வனவர் பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற குரூப் 2 பதவிகளுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

குரூப் 2A பதவிகளைப் பொறுத்தவரை:

  • செயல் அலுவலர் (Executive Officer) பதவிக்கு குறைந்தபட்ச வயது 25 வயதாக இருக்க வேண்டும்.
  • இதர குரூப் 2A பதவிகளுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
  • குரூப் 2A பதவிகளுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 2 & 2A வேலைவாய்ப்பு 2025 மாதம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை

கடந்த ஆண்டு முதல், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு நேர்காணல் (Interview) ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது தேர்வு செயல்முறை இரண்டு முக்கிய கட்டங்களைக் கொண்டுள்ளது:

முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination):

  • இது ஒரு தகுதித் தேர்வு (Qualifying Exam) மட்டுமே.
  • குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகள் இரண்டிற்கும் பொதுவாக இந்தத் தேர்வு நடத்தப்படும்.
  • இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெறுவார்கள்.

முதன்மைத் தேர்வு (Main Examination):

  • குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு தனித்தனியாக முதன்மைத் தேர்வு நடத்தப்படும்.
  • இந்த இரண்டு தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதைப் பார்த்து படித்துக்கொள்ளலாம்.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) நடத்தப்படும். அதன் பின்னர், கலந்தாய்வு (Counselling) மூலம் பணி நியமனம் வழங்கப்படும்.

விவரங்கள்கட்டணம்
One-Time Registration FeeRs. 150
Preliminary Examination FeeRs. 100
Main Written Examination FeeRs. 200
SC/ SC (Arunthathiyars)/ ST/
PwBD/ Destitute Widow
கட்டணம் இல்லை
MBC/ Denotified Communities/
BC (Other than Muslim)/ BC (Muslim)
3 Free Chances
Ex-Servicemen2 Free Chances
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள், என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 15.07.2025 முதல் 13.08.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

TNPSC குரூப் 4 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments