TN STAT Recruitment 2024: தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் காலியாக உள்ள 25 டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி, துப்புரவு பணியாளர், இரவு காவலாளி – துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் Tamil Nadu Sales Tax Appellate Tribunal |
| காலியிடங்கள் | 25 |
| பணி | டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி, துப்புரவு பணியாளர், இரவு காவலாளி – துப்புரவு பணியாளர் |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 11.11.2024 |
| பணியிடம் | சென்னை, மதுரை, கோவை |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ctd.tn.gov.in/home |
TN STAT Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- டிரைவர் – 02 காலியிடங்கள்
- அலுவலக உதவியாளர் – 18 காலியிடங்கள்
- இரவு காவலாளி – 02 காலியிடங்கள்
- துப்புரவு பணியாளர் – 02 காலியிடங்கள்
- இரவு காவலாளி – துப்புரவு பணியாளர் – 01 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN STAT Recruitment 2024 கல்வித் தகுதி
- ஓட்டுநர் – இலகுரக மோட்டார் வாகன (LMV) ஓட்டுநர் உரிமத்துடன் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- அலுவலக உதவியாளர் – 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- இரவு காவலாளி – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- துப்புரவு பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
- இரவு காவலாளி – துப்புரவு பணியாளர் – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
TN STAT Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
- (OC) விண்ணப்பதாரர்களுக்கு – 18 முதல் 32 வயது வரை
- MBC, BC, BCM விண்ணப்பதாரர்களுக்கு -18 முதல் 34 வயது வரை
- ST/SC விண்ணப்பதாரர்களுக்கு – 18 முதல் 37 வயது வரை
- அனைத்து சாதி வேட்பாளர்களின் ஆதரவற்ற விதவைகளுக்கு – 18 முதல் 37 வயது வரை
- PwBD விண்ணப்பதாரர்களுக்கு – 18 முதல் 42 வயது வரை
TN STAT Recruitment 2024 சம்பள விவரங்கள்
- டிரைவர் – லெவல் 8 ரூ.19500 – 71900/-
- அலுவலக உதவியாளர் – நிலை 1 ரூ.15700 – 58100/-
- இரவு காவலாளி – நிலை 1 ரூ.15700 – 58100/-
- துப்புரவு பணியாளர் – நிலை 1 ரூ.15700 – 58100/-
- இரவு காவலாளி – துப்புரவு பணியாளர் – நிலை 1 ரூ.15700 – 58100/-
TN STAT Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- குறுகிய பட்டியல்
- நேர்காணல்
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TN STAT Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
- விண்ணப்பதாரர்கள் https://ctd.tn.gov.in/home என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பிற தேவையான தகவல்களுடன் முழுமையாக நிரப்ப வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களை (குடும்ப அட்டை நகல், வேலைவாய்ப்புப் பதிவு நகல், சாதிச் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ் நகல், மதிப்பெண் தாள் நகல்) சுய சான்றொப்பமிட்ட விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- விண்ணப்பதாரர் முன்னுரிமை கோரும் மாற்றுத் திறனாளியாக இருந்தால், அவர்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட ஊனமுற்றோர் சான்றிதழை இணைக்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் தகவலில் ஏதேனும் தவறான தகவல்கள் கண்டறியப்பட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
- விண்ணப்பதாரர் இரு சக்கர வாகனம் ஓட்ட முடியும் மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் (விரும்பினால்).
- விண்ணப்பங்களை 11.11.2024 மாலை 5:45 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு பதிவு அஞ்சல்/விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். காலக்கெடுவிற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
தமிழ்நாடு விற்பனைவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், 2ம் தளம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம், உயர்நீதிமன்ற வளாகம், சென்னை – 104.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- இந்திய விமானப் படையில் GD வேலை – 340 காலியிடங்கள் || மாதம் ரூ.56,100 சம்பளம்! Indian Air Force Recruitment 2025
- 10வது, 12வது போதும் எயிம்ஸ் நிறுவனத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை – 1383 காலியிடங்கள் || மாதம் ரூ.18,000 சம்பளம்! AIIMS CRE 4 Recruitment 2025
- தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – 91 காலையிடங்கள்.. ரூ.44,500 சம்பளம் || டிகிரி தேர்ச்சி போதும்! NABARD Assistant Manager Officers Grade A Recruitment 2025
- 10 ஆம் வகுப்பு போதும் தமிழ்நாடு அரசு சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Tamilnadu Sathunavu Thurai Recruitment 2025
- 10வது, 12வது போதும் அரசு பள்ளியில் வேலை – 14967 காலியிடங்கள்… உதவியாளர் பணி || சம்பளம்: ரூ.18,000! KVS Recruitment 2025

















