TN Village Assistant Recruitment 2025 2299 Vacancy: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த கிராம உதவியாளர் பதவியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், எழுத மற்றும் படிக்கத் தெரிந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், வருவாய்த் துறையானது தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 2,299 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Tamilnadu Village Assistant Recruitment 2025: தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான முக்கிய விவரங்கள் மற்றும் மாவட்ட வாரியான காலியிடங்கள் கீழே அட்டவணை வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.