Madras High Court DEO Recruitment 2026: 115 Data Entry Operator Posts | Apply Now!

சென்னை உயர்நீதிமன்றத்தில் Data Entry Operator வேலை – 115 காலியிடங்கள்! Degree தகுதி | மாதம் ₹15,000 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்! Madras High Court DEO Recruitment 2026

Madras High Court DEO Recruitment 2026: சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் e-Sewa Kendra மையங்களில் பணிபுரிய Data Entry Operator பதவிக்கு மொத்தம் 115 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹15,000 தொகுப்பூதியம் வழங்கப்படும். இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 23.09.2026 முதல் 29.09.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த Madras High Court Data Entry Operator Recruitment 2026 வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? மாவட்ட வாரியாக எத்தனை காலியிடங்கள் உள்ளன? தேர்வு முறை எப்படி இருக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழுமையான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவரம்தகவல்
நிறுவனம்High Court of Madras – சென்னை உயர்நீதிமன்றம்
அறிவிப்பு எண்Notification No. 217/2026
பதவி பெயர்Data Entry Operator
மொத்த காலியிடங்கள்115
பணி வகைஒப்பந்த அடிப்படையிலான பணி
மாத தொகுப்பூதியம்₹15,000
வயது வரம்பு18–35 வயது
விண்ணப்ப முறைஆன்லைன்
விண்ணப்ப தொடக்கம்23.09.2026
கடைசி தேதி29.09.2026
விண்ணப்பக் கட்டணம்கிடையாது
பணியிடம்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி
தேர்வு முறைWritten-cum-Skill Test + Viva Voce
அதிகாரப்பூர்வ விண்ணப்ப தளம்mhc.tn.gov.in/esk_rec

மேற்கண்ட ஆட்சேர்ப்பு விவரங்கள் 23.09.2026 அன்று வெளியிடப்பட்ட Notification No.217/2026 அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • பதவி: Data Entry Operator: 115 காலியிடங்கள்:

மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரங்கள்:

மாவட்டம் / இடம்காலியிடங்கள்
Madras High Court – Principal Seat02
அரியலூர்01
செங்கல்பட்டு03
சென்னை11
கோயம்புத்தூர்04
கடலூர்02
தர்மபுரி02
திண்டுக்கல்04
ஈரோடு02
கள்ளக்குறிச்சி04
காஞ்சிபுரம்03
கன்னியாகுமரி05
கரூர்01
மதுரை05
மயிலாடுதுறை01
நாகப்பட்டினம்02
நாமக்கல்01
நீலகிரி01
பெரம்பலூர்02
புதுக்கோட்டை01
இராமநாதபுரம்01
சேலம்04
சிவகங்கை01
தென்காசி02
தஞ்சாவூர்03
தேனி02
தூத்துக்குடி06
திருச்சிராப்பள்ளி05
திருநெல்வேலி05
திருப்பத்தூர்01
திருப்பூர்02
திருவள்ளூர்06
திருவண்ணாமலை04
திருவாரூர்04
வேலூர்03
விழுப்புரம்02
விருதுநகர்01
புதுச்சேரி06
மொத்தம்115

சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2026 Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் B.Sc Computer Science, B.Sc Information Technology, BCA, B.E Computer Science, B.Tech, MCA, M.Sc Computer Science, M.E Computer Science, M.Tech அல்லது M.Sc Information Technology ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கீழ்கண்ட கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்:

கல்வித் தகுதி
B.Sc Computer Science
B.Sc Information Technology
BCA Bachelor of Computer Applications
B.E. Computer Science
B.Tech தொடர்புடைய Computer / IT துறை
MCA Master of Computer Applications
M.Sc Computer Science
M.E. Computer Science
M.Tech தொடர்புடைய Computer / IT துறை
M.Sc Information Technology

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வு செய்யப்படும் Data Entry Operator பணியாளர்களுக்கு மாதம் ₹15,000 தொகுப்பூதியம் (Consolidated Pay) வழங்கப்படும். இந்தப் பணி நிரந்தர அரசு பணி அல்ல; Contract Staff அடிப்படையில் நடைபெறும்.

பதவிமாத சம்பளம்
Data Entry Operatorமாதம் ₹15,000

இதன்படி, IMH Chennai Recruitment 2026-ல் ₹25,000 முதல் ₹1,25,000 வரை மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த Data Entry Operator பணிக்கு 01.09.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 35 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது. அதாவது, அறிவிப்பு விதிப்படி 02.09.1991க்கு முன்பு பிறந்தவர்கள் அதிக வயதுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.

வயது தளர்வு அல்லது குறிப்பிட்ட பிரிவினருக்கான சிறப்பு விதிமுறைகள் பொருந்துமா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள நிபந்தனைகளுடன் சரிபார்க்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம் Data Entry Operator வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணல் மட்டும் நடத்தப்படாது. முதலில் Written-cum-Skill Test நடைபெறும். அதில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் Merit அடிப்படையில் Viva Voce தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

மொத்த தேர்வு மதிப்பெண்கள் 100:

தேர்வு நிலைமதிப்பெண்கள்குறைந்தபட்ச தேர்ச்சி
Written Test2510
Skill Test2510
Viva Voce5020
மொத்தம்100

Written-cum-Skill Test-ல் தகுதி பெறுபவர்களில் Merit அடிப்படையில் 1:3 விகிதத்தில் Viva Voce-க்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.

Written Test – 25 மதிப்பெண்கள்

  • Written Test-ல் மொத்தம் 25 Objective Questions இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் மொத்தம் 25 மதிப்பெண்கள் வழங்கப்படும். குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 10.
  • பாடத்திட்டத்தில் Windows & Linux Basics, Networking, PDF மற்றும் Document Handling, Office/Excel, Video Conferencing, Hardware Troubleshooting, Internet Basics மற்றும் Cyber Security போன்ற கணினி தொடர்பான தலைப்புகள் இடம்பெறும்.

Skill Test – 25 மதிப்பெண்கள்

  • Skill Test பகுதியில் Data Entry Operator பணிக்கு தேவையான கணினி செயல்முறைத் திறன்கள் சோதிக்கப்படும்.
  • இதில் Documents Scan & OCR, PDF to OCR Conversion, LibreOffice, LAN / IP Configuration, Hardware Troubleshooting, Driver Installation உள்ளிட்ட செயல்முறைத் திறன்கள் இடம்பெறும். Skill Test-க்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 10.

Viva Voce – 50 மதிப்பெண்கள்

  • Written-cum-Skill Test-ல் தகுதி பெற்றவர்களில் Merit அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் Viva Voce-க்கு அழைக்கப்படுவார்கள். Viva Voce மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும்; குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 20.

இந்த ஆட்சேர்ப்புக்கு Application Fee / Examination Fee எதுவும் கிடையாது. அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களும் கட்டணம் செலுத்தாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
நிகழ்வுதேதி
அறிவிப்பு வெளியான தேதி23.09.2026
ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்23.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி29.09.2026
Written-cum-Skill Test10.10.2026 / 11.10.2026 – Tentative
Viva Voce24.10.2026 / 25.10.2026 – Tentative

Written-cum-Skill Test மற்றும் Viva Voce தேதிகள் Tentative என குறிப்பிடப்பட்டுள்ளன. இறுதி தேதி, நேரம் மற்றும் அழைப்பு விவரங்கள் அதிகாரப்பூர்வ recruitment portal மற்றும் தொடர்புடைய District Court websites மூலம் வெளியிடப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம் Data Entry Operator வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

முதலில் Madras High Court Data Entry Operator Recruitment-க்கான அதிகாரப்பூர்வ e-Sewa Kendra recruitment portal-ஐ திறக்க வேண்டும்.

  • படி 1: https://www.mhc.tn.gov.in/esk_rec என்ற recruitment portal-க்கு செல்லவும்.
  • படி 2: Data Entry Operator (Contractual Basis) என்ற பதவிக்கான recruitment notification மற்றும் Terms & Conditions-ஐ முழுமையாக படிக்கவும்.
  • படி 3: இந்த application portal Mobile Phone / Tablet-ல் இயங்காது. எனவே Desktop அல்லது Laptop மூலம் விண்ணப்பிப்பது அவசியம்.
  • படி 4: New Registration செய்து, பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், Email ID மற்றும் தேவையான தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
  • படி 5: கல்வித் தகுதி, முகவரி மற்றும் பிற தேவையான தகவல்களை சரியாக உள்ளிடவும்.
  • படி 6: விண்ணப்பிக்கும் ஒரு District / இடத்தை மட்டும் தேர்வு செய்யவும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு விண்ணப்பிப்பது அனுமதிக்கப்படாது.
  • படி 7: தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றை அறிவுறுத்தப்பட்ட முறையில் Upload செய்யவும்.
  • படி 8: இந்த recruitment-க்கு Application Fee கிடையாது என்பதால் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
  • படி 9: Final Submit செய்வதற்கு முன், நீங்கள் பதிவு செய்த அனைத்து விவரங்களையும் கவனமாக சரிபார்க்கவும். குறிப்பாக பெயர், பிறந்த தேதி மற்றும் கல்வித் தகுதி விவரங்களில் தவறு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • படி 10: விண்ணப்பத்தை 29.09.2026க்குள் Final Submit செய்து, Application Form / Registration details-ஐ Download அல்லது Print செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

முக்கியம்: Final Submit செய்யப்பட்ட விண்ணப்பத்தில் பின்னர் மாற்றம் செய்ய முடியாது எனவே Submit செய்வதற்கு முன் அனைத்து விவரங்களையும் மீண்டும் சரிபார்க்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Madras High Court DEO Recruitment 2026 – சுருக்கமாக

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் e-Sewa Kendra மையங்களில் பணியாற்ற 115 Data Entry Operator பணியிடங்களுக்கு புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Computer Science / IT சார்ந்த Degree அல்லது PG Degree முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹15,000 தொகுப்பூதியம் வழங்கப்படும். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை. இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
  • விண்ணப்பம் 23.09.2026 முதல் 29.09.2026 வரை ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது. Written-cum-Skill Test மற்றும் Viva Voce அடிப்படையில் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் கடைசி நாளை எதிர்பார்க்காமல் முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.

Madras High Court DEO Recruitment 2026 – FAQ

1. Madras High Court DEO Recruitment 2026-ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?

மொத்தம் 115 Data Entry Operator காலியிடங்கள் உள்ளன.

2. இந்த வேலைக்கு என்ன கல்வித் தகுதி வேண்டும்?

B.Sc Computer Science, B.Sc IT, BCA, B.E Computer Science, B.Tech, MCA, M.Sc Computer Science, M.E Computer Science, M.Tech அல்லது M.Sc IT போன்ற தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும்.

3. Madras High Court DEO சம்பளம் எவ்வளவு?

Data Entry Operator பணிக்கு மாதம் ₹15,000 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

4. வயது வரம்பு என்ன?

01.09.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தும் 35 வயதை பூர்த்தி செய்யாமலும் இருக்க வேண்டும்.

5. விண்ணப்பக் கட்டணம் உள்ளதா?

இல்லை. இந்த recruitment-க்கு Application / Examination Fee கிடையாது.

6. தேர்வு எப்படி நடைபெறும்?

Written Test, Skill Test மற்றும் Viva Voce ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். மொத்தம் 100 மதிப்பெண்கள்.

7. ஒரு விண்ணப்பதாரர் பல மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியுமா?

இல்லை. விண்ணப்பிக்கும் போது ஒரு மாவட்டத்தை மட்டும் தேர்வு செய்ய வேண்டும்.

8. Madras High Court DEO விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

29.09.2026 விண்ணப்பிக்க கடைசி தேதி.

9. Mobile மூலம் விண்ணப்பிக்க முடியுமா?

Recruitment application portal Mobile Phone / Tablet-ல் இயங்காது. Desktop அல்லது Laptop மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Madras High Court DEO Recruitment 2026, Madras High Court Recruitment 2026, Madras High Court Data Entry Operator Recruitment 2026, Madras High Court DEO Jobs 2026, Madras High Court Vacancy 2026, Data Entry Operator Jobs 2026, Madras High Court 115 Vacancy, e-Sewa Kendra Recruitment 2026, Madras High Court Apply Online 2026, Tamil Nadu Government Jobs 2026, சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2026, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2026, சென்னை உயர்நீதிமன்ற Data Entry Operator வேலை, Data Entry Operator வேலைவாய்ப்பு 2026, உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2026, Degree வேலைவாய்ப்பு 2026, கணினி பட்டதாரிகளுக்கான அரசு வேலை, e-Sewa Kendra வேலைவாய்ப்பு 2026, சென்னை நீதிமன்ற வேலைவாய்ப்பு 2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top