Wednesday, July 16, 2025
Home10th Pass Govt Jobs10வது, 12வது முடித்தவர்களுக்கு இந்திய விமான படையில் எழுத்தர், உதவியாளர் வேலை! - சம்பளம்: ரூ.18000/-...

10வது, 12வது முடித்தவர்களுக்கு இந்திய விமான படையில் எழுத்தர், உதவியாளர் வேலை! – சம்பளம்: ரூ.18000/- Indian Airforce Recruitment 2025

Indian Airforce Recruitment 2025: இந்திய விமானப்படையில் (IAF) Group C பிரிவில் காலியாக உள்ள 153 Lower Division Clerk (LDC),Store Keeper, Cook, Multi-Tasking Staff (MTS),Hindi Typist, Carpenter (SK),Painter (Skilled),Mess Staff, Housekeeping Staff, Laundryman, Vulcaniser, Civilian Mechanical Transport Driver (OG)) பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்திய விமானப்படை
காலியிடங்கள்153 Group C
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி15.06.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://indianairforce.nic.in/

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk – LDC)14
இந்தி தட்டச்சர் (Hindi Typist)02
ஸ்டோர் கீப்பர் (Store Keeper)16
சமையலர் (Cook)12
தச்சர் (Carpenter)03
ஓவியர் (Painter – Skilled)03
Multi-Tasking Staff – MTS53
உணவக பணியாளர் (Mess Staff)07
Housekeeping Staff31
சலவை தொழிலாளர் (Laundryman)03
Vulcaniser01
மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர்
(Civilian Mechanical Transport Driver)
08
மொத்தம்153

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
கீழ் பிரிவு எழுத்தர்
(Lower Division Clerk – LDC)
அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் வேண்டும். (35 wpm மற்றும் 30 wpm என்பது முறையே 10500 KDPH / 9000 KDPH க்கு சமம்).
இந்தி தட்டச்சர் (Hindi Typist)அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் வேண்டும். (35 wpm மற்றும் 30 wpm என்பது முறையே 10500 KDPH / 9000 KDPH க்கு சமம்).
ஸ்டோர் கீப்பர் (Store Keeper)அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி.
சமையலர் (Cook)அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. கேட்டரிங் துறையில் சான்றிதழ் அல்லது டிப்ளமோ மற்றும் 1 ஆண்டு அனுபவம் வேண்டும்.
தச்சர் (Carpenter)அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. ITI தச்சர் சான்றிதழ்
ஓவியர் (Painter – Skilled)அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. ITI ஓவியர் சான்றிதழ்
Multi-Tasking Staff – MTSஅங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 10 ஆம் வகுப்பு (மெட்ரிகுலேஷன்) அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி.
உணவக பணியாளர் (Mess Staff)அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி.
Housekeeping Staffஅங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி.
சலவை தொழிலாளர் (Laundryman)அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி.
Vulcaniserஅங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி அல்லது பொருத்தமான துறையில் முன்னாள் இராணுவ வீரர்.
மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் (Civilian Mechanical
Transport Driver)
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. செல்லுபடியாகும் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் தொழில்முறை திறன் மற்றும் இயந்திரவியல் அறிவு. மோட்டார் வாகனங்களை ஓட்டுவதில் குறைந்தது 2 ஆண்டு அனுபவம்.

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
பதவியின் பெயர்சம்பளம்
Lower Division Clerk (LDC)₹19,900 – ₹63,200
Hindi Typist₹19,900 – ₹63,200
Store Keeper₹19,900 – ₹63,200
Cook₹19,900 – ₹63,200
Carpenter (Skilled)₹19,900 – ₹63,200
Painter (Skilled)₹19,900 – ₹63,200
Multi-Tasking Staff (MTS)₹18,000 – ₹56,900
Mess Staff₹18,000 – ₹56,900
Housekeeping Staff₹18,000 – ₹56,900
Laundryman₹18,000 – ₹56,900
Vulcaniser₹18,000 – ₹56,900
Civilian Mechanical Transport Driver₹19,900 – ₹63,200

இந்திய விமானப்படை குரூப் சி ஆட்சேர்ப்பு 2025க்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test), திறன் தேர்வு/தொழில் தேர்வு/உடல் தகுதித் தேர்வு (Skill Test/ Trade Test / Physical Test) மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification) ஆகிய நிலைகளின் அடிப்படையில் தகுதியானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர். இது தொடர்பான மேலும் விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய விமானப்படையில் குரூப் சி பணிக்குத் தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க, முதலில் https://indianairforce.nic.in/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு மூலமாகவும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, தபால் மூலம் 15.06.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பதவிக்கான விண்ணப்பங்களையும் அனுப்ப வேண்டிய முகவரி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டிருக்கும். ஆகையால், விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு முறை கவனமாகப் படித்து, அனைத்து விவரங்களையும் சரிபார்த்துக் கொள்வது முக்கியம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: 17.05.2025
  • விண்ணப்பம் முடியும் நாள்: 15.06.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments