தேர்வு கிடையாது; 10வது படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு கார்டைட் தொழிற்சாலையில் வேலை! Cordite Factory Aruvankadu Recruitment 2025

Cordite Factory Aruvankadu Recruitment 2025: தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் செயல்பட்டு வரும் கார்டைட் தொழிற்சாலை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு காலியாகவுள்ள 45 அப்ரண்டிஸ் (Trade Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளுக்கு தேவையான வெடிப்பொருட்களை தயாரிக்கு தொழிற்சாலையாக கார்டைட் தொழிற்சாலை விளங்குகிறது. இங்கு 2024 – 25 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்Cordite Factory
கார்டைட் தொழிற்சாலை
காலியிடங்கள்45
பணிகள்அப்ரண்டிஸ் (Trade Apprentice)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி13.06.2025
பணியிடம்நீலகிரி மாவட்டம் -அருவங்காடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://munitionsindia.in/

மத்திய அரசு அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலிப்பணியிடம்
Non ITI Attendant Operator Chemical Plant18
Ex ITI Attendant Operator Chemical Plant20
Ex ITI Laboratory Assistant Chemical Plant07
மொத்தம்45

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Non – ITI (10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள்)

  • விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன்/10 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • அறிவியல் மற்றும் கணிதத்தில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

Ex-ITI (ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள்)

  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து சம்பந்தப்பட்ட வர்த்தகத் தேர்வில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் ITI தேர்வில் பெற்றிருக்க வேண்டும்.
  • கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன்/10 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசு அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். அனைத்துப் பணியிடங்களுக்கும் இந்த வயது வரம்பு பொருந்தும்.

உயர் வயது வரம்பு தளர்வு:

வகைவயது தளர்வு
SC/ ST Applicants5 years
OBC Applicants3 years
PwBD (Gen/ EWS) Applicants10 years
PwBD (SC/ ST) Applicants15 years
PwBD (OBC) Applicants13 years
Ex-Servicemen ApplicantsAs per Govt. Policy
பதவியின் பெயர்சம்பளம்
Non – ITI (10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள்)ரூ.6,000/-
Ex-ITI (ITI தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள்)ரூ.7,000/-

NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit List (தகுதி பட்டியல்) மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மத்திய அரசு அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்த பின்னர், அதை பிரிண்ட் அவுட் எடுத்து அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பெரிய எழுத்துக்களில் (BLOCK LETTERS) மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான சான்றிதழ்களுடன், ஒரு கூடுதல் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை சுயசான்றொப்பம் செய்து (புகைப்படத்தின் பின்புறம்) இணைக்க வேண்டும். கடித உறையின் மீது “APPLICATION FOR THE INDUCTION OF TRADE APPRENTICES – (ATTENDANT OPERATOR CHEMICAL PLANT)” என்று தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பத்தை “The Chief General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District, Tamilnadu Pin – 643202” என்ற முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.05.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.06.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

குறிப்பு: விண்ணப்பதாரர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை கவனமாக நிரப்ப வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பெற்ற மதிப்பெண்கள் ஆகியவை மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான சான்றிதழில் உள்ள விவரங்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆவண சரிபார்ப்பின் போது ஏதேனும் முரண்பாடு கண்டறியப்பட்டால், விண்ணப்பம் ரத்து செய்யப்படலாம் மற்றும் தகுதியிழப்பு ஏற்படலாம்.

முக்கியமான அனைத்து தகவல்களும் மின்னஞ்சல்/எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுவதால், விண்ணப்பதாரர்கள் தங்கள் செயலில் உள்ள மொபைல் எண் மற்றும் செல்லுபடியாகும் மின்னஞ்சல் ஐடியை விண்ணப்பத்தில் குறிப்பிடவும், மேலும் முழு ஈடுபாடு செயல்முறையின் போதும் அவற்றை செயலில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த தகவல்கள் விண்ணப்பதாரர்களால் படிக்கப்பட்டதாக கருதப்படும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment