TNRD District Wise Recruitment 2026: தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கான கடைசி தேதிக்கு முன்னதாக தங்களின் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து தபால் மூலமாக அனுப்ப வேண்டும். குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யும் முறை போன்ற முழுமையான விவரங்களை அந்தந்த மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
TNRD District Wise Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | Tamilnadu Rural Development and Panchayat Raj Department (TNRD) தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணிகள் | அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | tnrd.tn.gov.in |
TNRD District Wise Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி | சம்பளம் (மாதம்) |
| அலுவலக உதவியாளர் | பல்வேறு |
| ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) | பல்வேறு |
| இரவு காவலர் | பல்வேறு |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNRD Recruitment 2026 கல்வித் தகுதி
அலுவலக உதவியாளர்: * 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மிதிவண்டி (Bicycle) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
- தமிழில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver): * 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- செல்லத்தக்க (Valid) ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- ஓட்டுநராக குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இரவு காவலர்: * தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
TNRD Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.
| பதவி | வயது வரம்பு |
| அலுவலக உதவியாளர் | 18 முதல் 37 வயது வரை |
| ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) | 18 முதல் 42 வயது வரை |
| இரவு காவலர் | 18 முதல் 37 வயது வரை |
TNRD Recruitment 2026 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பளம் விவரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன.
| பதவி | சம்பளம் (மாதம்) |
| அலுவலக உதவியாளர் | Rs.15,700 – 58,100/- |
| ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) | Rs.19,500 – 62,000/- |
| இரவு காவலர் | Rs.15,700 – 58,100/- |
TNRD Recruitment 2026 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும்.
TNRD District Wise Recruitment 2026 விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம்: ரூ.50/-
TNRD District Wise Recruitment 2026 முக்கிய தேதிகள்:
| மாவட்டம் | விண்ணப்பிக்க கடைசி தேதி |
| கோயம்புத்தூர் | 10.02.2026 |
| திண்டுக்கல் | 16.02.2026 |
| ஈரோடு | 10.02.2026 |
| கரூர் | 13.02.2026 |
| திருப்பூர் | 09.02.2026 |
TNRD District Wise Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
- தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பப் படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
- குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| மாவட்டம் | அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் |
| கோயம்புத்தூர் | அதிகாரப்பூர்வ அறிவிப்பு விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளம் |
| திண்டுக்கல் | அதிகாரப்பூர்வ அறிவிப்பு விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளம் |
| ஈரோடு | அதிகாரப்பூர்வ அறிவிப்பு விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளம் |
| கரூர் | அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் |
| திருப்பூர் | அதிகாரப்பூர்வ அறிவிப்பு விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ இணையதளம் |
| பிற மாவட்டங்களுக்கு விரைவில் பதிவிடப்படும் | |







