UPSC Forest Service Recruitment 2026: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), 2026-ஆம் ஆண்டிற்கான இந்திய வனப் பணி (Indian Forest Service – IFS) தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உயரிய பதவிகளில் ஒன்றான இதில் சேர்ந்து தேசத்திற்குச் சேவையாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். மொத்தம் 80 காலிப்பணியிடங்களுக்கு இந்தாண்டு இத்தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி வரும் 24.02.2026-க்குள் தங்களது விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாகச் சமர்ப்பிக்க வேண்டும்.. இந்தப் பணிக்கான கல்வித் தகுதிகள், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு செய்யப்படும் விதம் போன்ற விரிவான தகவல்களைக் கீழே காணலாம்.
UPSC Forest Service Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Union Public Service Commission Indian Forest Service Examination 2026 |
| காலியிடங்கள் | 80 |
| பணிகள் | Indian Forest Service Examination 2026 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 24.02.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://upsc.gov.in/ |
UPSC Forest Service Recruitment 2026 காலியிடங்கள் விவரம்
UPSC இந்திய வன சேவை தேர்வு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Indian Forest Service Examination 2026 – 80 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
UPSC Forest Service Recruitment 2026 கல்வித் தகுதி
UPSC இந்திய வன சேவை தேர்வு வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக பின்வரும் பாடங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்:
- விலங்கு வளர்ப்பு மற்றும் கால்நடை அறிவியல் (Animal Husbandry and Veterinary Science)
- தாவரவியல் (Botany)
- வேதியியல் (Chemistry)
- புவியியல் (Geology)
- கணிதம் (Mathematics)
- இயற்பியல் (Physics)
- புள்ளியியல் (Statistics)
- விலங்கியல் (Zoology)
- அல்லது வேளாண்மை (Agriculture), வனவியல் (Forestry) அல்லது பொறியியல் (Engineering) துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
UPSC Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
தேதி கணக்கீடு: 1 ஆகஸ்ட் 2026-ன் படி.
- குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்
- அதிகபட்ச வயது: 32 ஆண்டுகள்
முக்கிய குறிப்பு: விண்ணப்பதாரர் 2 ஆகஸ்ட் 1994-க்கு முன்னரோ அல்லது 1 ஆகஸ்ட் 2005-க்கு பின்னரோ பிறந்திருக்கக் கூடாது.
வயது தளர்வு:
பல்வேறு பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பில் அரசு விதிகளின்படி அளிக்கப்படும் தளர்வுகள்:
| வயது வரம்பின் தளர்வு | தளர்வு (ஆண்டுகள்) |
| SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
| OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
| PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
| முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen) | அரசின் கொள்கைப்படி தளர்வு அளிக்கப்படும் |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
UPSC Recruitment 2026 சம்பள விவரங்கள்
UPSC இந்திய வன சேவை தேர்வு வேலைவாய்ப்பு 2026 பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக Rs. 56,100 – Rs. 1,32,000 வழங்கப்படும். இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
IFS Recruitment 2026 தேர்வு செயல்முறை
IFS இந்திய வன சேவை தேர்வு வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
- Preliminary and Main Examination
- Interview/Personality Test
தமிழ்நாட்டில் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு மையம்:
- Preliminary Exam: Chennai, Coimbatore, Madurai, Tiruchirapalli, Vellore
- Main Examination: Chennai
IFS Recruitment 2026 விண்ணப்பக் கட்டணம்
- பெண்கள்/ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
UPSC Forest Service Recruitment 2026 முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 04.02.2026
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 24.02.2026
UPSC Forest Service Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது?
IFS இந்திய வன சேவை தேர்வு வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.02.2026 முதல் 24.02.2026 தேதிக்குள் https://upsc.gov.in/ இணையதளத்தில் சென்று Register செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |










