TNHRCE Chennai Recruitment 2024

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு.. ரூ.39,900 வரை சம்பளம்.. தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்..! TNHRCE Chennai Recruitment 2024

TNHRCE Chennai Recruitment 2024: சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் காலியாக உள்ள மின் பணியாளர், பகல்காவலர், திருவலகு மற்றும் சுயம்பாகி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 04 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில்
காலியிடங்கள்04
பணிமின் பணியாளர், பகல்காவலர்,
திருவலகு மற்றும் சுயம்பாகி
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி09.12.2024
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://hrce.tn.gov.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • மின் பணியாளர் – 01 காலியிடங்கள்
  • பகல்காவலர் – 01 காலியிடங்கள்
  • திருவலகு – 01 காலியிடங்கள்
  • சுயம்பாகி – 01 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மின் பணியாளர் பணிக்கு:

  • அரசு/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மின்சார வாரிய தொழில்துறை பயிற்சி (ITI) பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மின்சார உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட B சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.

பகல்காவலர் பணிக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

திருவலகு பணிக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சுயம்பாகி பணிக்கு

  • தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • திருக்கோயில் பழக்க வழக்கங்களின்படி நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
  • திருக்கோயில் பூஜை மற்றும் திருவிழாக்கள் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
  • மின் பணியாளர் – ரூ.12600 முதல் ரூ.39900/- வரை
  • பகல்காவலர் – ரூ.11600 முதல் ரூ.36800/- வரை
  • திருவலகு – ரூ.10000 முதல் ரூ.31500/- வரை
  • சுயம்பாகி – ரூ.13200 முதல் ரூ.41800/- வரை

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  • அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில் அதிகாரப்பூர்வ இணையதளம் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • இங்கிருந்து, இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தை கவனமாக படித்து, அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்யவும்.
  • தேவையான அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்: செயல் அலுவலர், அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை – 600 049.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.11.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.12.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top