TNPSC Group 5A Recruitment 2024

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.36,400/- முதல் || உடனே விண்ணப்பிக்கவும் TNPSC Group 5A Recruitment 2024

TNPSC Group 5A Recruitment 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5A தேர்வு மூலம் காலியாக உள்ள 35 உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
காலியிடங்கள்35
பணிஉதவி பிரிவு அதிகாரி
(Assistant Section Officer)
விண்ணப்பிக்கும் முறைOnline மூலம்
கடைசி தேதி15.11.2024
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tnpsc.gov.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer) – 35 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Any Degree தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் Drafting அனுபவம் பெற்று இருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, TNPSC குரூப் 5A உதவிப் பிரிவு அதிகாரி பணிக்கு SC, SC(A)s, ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள். MBCகள்/DCகள், BC(OBCM)கள், BCMகள் மற்றும் பிற பிரிவுகள் – 35 ஆண்டுகள்.

TNPSC குரூப் 5A உதவி பிரிவு அதிகாரி பணிக்கு சம்பளம் – ரூ.36400 – 134200/-

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்

  • எழுத்துத் தேர்வு (தாள்-I & தாள்-II)
  • சான்றிதழ் சரிபார்ப்பு

ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • ஒரு முறை பதிவு கட்டணம் – ரூ.150/-
  • முதற்கட்ட தேர்வு கட்டணம் – ரூ. 100/-
  • முதன்மை எழுத்துத் தேர்வுக் கட்டணம் – ரூ. 200/-

கட்டணச் சலுகை:

  • முன்னாள் ராணுவத்தினர் – இரண்டு இலவச வாய்ப்புகள்.
  • ஆதரவற்ற விதவை – முழு விலக்கு
  • SC, SC(A) மற்றும் ST – முழு விலக்கு
  • BC, BC (M), MBC / DC – மூன்று இலவச வாய்ப்புகள்
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.10.2024 முதல் 15.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்பம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top