12வது முடித்தவர்களுக்கு தமிழக அரசு மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Chennai Youth Justice Committee Recruitment 2025

Chennai Youth Justice Committee Recruitment 2025: தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள 01 உதவியாளர் & கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமம்
காலியிடங்கள்01
பணிகள்உதவியாளர் & கணினி இயக்குபவர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி06.05.2025
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://chennai.nic.in/

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
Assistant -cum-Data Entry Operator
உதவியாளர் & கணினி இயக்குபவர்
01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant -cum-Data Entry Operator) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். கூடுதலாக, அவர்கள் கணினி அறிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இந்த உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு விண்ணப்பிக்கும் பொது விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு மாதம் ரூ.11,916/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://chennai.nic.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து, அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்து 22.04.2025 முதல் 06.05.2025 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

எண். 13, சாமி பிள்ளைத் தெரு, சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை – 600 112.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment