TN DCPU Recruitment 2026: TN DCPU Recruitment 2026: தமிழ்நாடு அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit – DCPU) சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் கீழ் செயல்படும் இளைஞர் நீதி குழுமத்தில் (Juvenile Justice Board) பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான மாவட்ட வாரியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் Assistant – Bench Clerk (உதவியாளர் – அமர்வு எழுத்தர்), Junior Assistant – Bench Clerk (இளநிலை உதவியாளர் – அமர்வு எழுத்தர்) மற்றும் Office Assistant (அலுவலக உதவியாளர்) உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. இப்பணிகளுக்கு பதவியின் அடிப்படையில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Any Degree வரை கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ₹13,000 முதல் ₹25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும், விண்ணப்பதாரர்களின் வயது பொதுவாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மாவட்டத்தைப் பொறுத்து கடைசி தேதி மாறுபடுவதால், விண்ணப்பிக்கும் முன் அந்தந்த மாவட்ட அறிவிப்பை கவனமாக சரிபார்க்க வேண்டும். இந்த கட்டுரையில் TN DCPU Recruitment 2026 தொடர்பான மாவட்ட வாரியான காலியிட விவரம், பணிகளின் கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பக் கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் மாவட்ட வாரியான கடைசி தேதிகள் உள்ளிட்ட முழுமையான தகவல்களைப் பார்க்கலாம்.
TN DCPU Recruitment 2026
| விவரம் | தகவல்கள் |
|---|---|
| வேலைப்பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறை | தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) Tamil Nadu District Child Protection Unit / Juvenile Justice Board |
| காலியிடங்கள் | பல்வேறு (மாவட்ட வாரியாக மாறுபடும்) |
| பணியிடங்கள் | Assistant – Bench Clerk (உதவியாளர் – அமர்வு எழுத்தர்), Junior Assistant – Bench Clerk (இளநிலை உதவியாளர் – அமர்வு எழுத்தர்), Office Assistant (அலுவலக உதவியாளர்) |
| கல்வித் தகுதி | 8ஆம் வகுப்பு முதல் Any Degree வரை |
| சம்பளம் | ₹13,000 – ₹25,000 வரை |
| வயது வரம்பு | அதிகபட்சம் 42 வயது |
| விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
| தேர்வு முறை | நேர்காணல் |
| விண்ணப்பிக்கும் முறை | நேரில் / தபால் மூலம் |
| பணியிடம் | தமிழ்நாடு – மாவட்ட வாரியாக |
TNRD Record Clerk Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2026, பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Assistant – Bench Clerk (உதவியாளர் – அமர்வு எழுத்தர்)
- Junior Assistant – Bench Clerk (இளநிலை உதவியாளர் – அமர்வு எழுத்தர்)
- Office Assistant (அலுவலக உதவியாளர்)
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNRD Record Clerk Recruitment 2026 கல்வித் தகுதி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் பின்வருமாறு:
| பதவி | கல்வித் தகுதி |
|---|---|
| Assistant – Bench Clerk (உதவியாளர் – அமர்வு எழுத்தர்) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் Science, Arts, Commerce, Engineering, Medicine அல்லது ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட துறையில் Bachelor’s Degree (Any Degree) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், Computer Qualification பெற்றவர்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சுச் சான்றிதழ் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். |
| Junior Assistant – Bench Clerk (இளநிலை உதவியாளர் – அமர்வு எழுத்தர்) | 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Computer Proficiency இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சுச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். |
| Office Assistant (அலுவலக உதவியாளர்) | 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். |
TNRD Record Clerk Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு பொதுவாக 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வயது தொடர்பான தகுதியை விண்ணப்பிக்கும் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி சரிபார்க்க வேண்டும்.
| பதவி | வயது வரம்பு |
|---|---|
| Assistant – Bench Clerk (உதவியாளர் – அமர்வு எழுத்தர்) | இப்பணிக்கு 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
| Junior Assistant – Bench Clerk (இளநிலை உதவியாளர் – அமர்வு எழுத்தர்) | இப்பணிக்கு 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
| Office Assistant (அலுவலக உதவியாளர்) | இப்பணிக்கு 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். |
TNRD Recruitment 2026 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பள விவரங்கள் பின்வருமாறு:
| பதவி | மாத சம்பளம் |
|---|---|
| Assistant – Bench Clerk (உதவியாளர் – அமர்வு எழுத்தர்) | மாதம் ₹25,000 சம்பளம் |
| Junior Assistant – Bench Clerk (இளநிலை உதவியாளர் – அமர்வு எழுத்தர்) | மாதம் ₹20,000 சம்பளம் |
| Office Assistant (அலுவலக உதவியாளர்) | மாதம் ₹13,000 சம்பளம் |
இதன்படி, TN DCPU Recruitment 2026 மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹13,000 முதல் ₹25,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
TNRD Record Clerk Recruitment 2026 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
- நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNRD Record Clerk Recruitment 2026 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2026-க்கான விண்ணப்பக் கடைசி தேதி மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடுகிறது.
| மாவட்டம் | கடைசி தேதி |
|---|---|
| செங்கல்பட்டு | 22.09.2026 |
| திருவாரூர் | 30.09.2026 |
| திருவள்ளூர் | 26.09.2026 |
| விருதுநகர் | 25.09.2026 |
| இராமநாதபுரம் | 28.09.2026 |
| நாமக்கல் | 25.09.2026 |
| காஞ்சிபுரம் | 30.09.2026 |
| கள்ளக்குறிச்சி | 28.09.2026 |
முக்கிய குறிப்பு: மாவட்ட வாரியான அறிவிப்புகளில் விண்ணப்பிக்கும் நடைமுறை மற்றும் பிற நிபந்தனைகள் மாறுபடக்கூடும். எனவே, விண்ணப்பிக்கும் மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படிக்க வேண்டும்.
TNRD Record Clerk Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்:
TN DCPU Recruitment 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட DCPU Recruitment Notification மற்றும் Application Form-ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்ய வேண்டும். கல்வித் தகுதி, வயது, கணினித் தகுதி, தட்டச்சுத் தகுதி உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களின் நகல்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இணைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன் குறிப்பிட்ட மாவட்டத்தின் கடைசி தேதி மற்றும் முகவரியை சரிபார்ப்பது அவசியம்.
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பிக்கும் மாவட்டத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பொதுவாக பின்வரும் ஆவணங்களின் நகல்கள் தேவைப்படலாம்:
- கல்வித் தகுதி சான்றிதழ்
- மதிப்பெண் சான்றிதழ்
- பிறந்த தேதி / வயது சான்று
- ஆதார் அல்லது பிற அடையாளச் சான்று
- சமூகச் சான்றிதழ், பொருந்தும் பட்சத்தில்
- கணினி தகுதி சான்றிதழ்
- தமிழ் / ஆங்கில தட்டச்சுச் சான்றிதழ், பொருந்தும் பட்சத்தில்
- அனுபவச் சான்றிதழ், அறிவிப்பில் கேட்டிருந்தால்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
குறிப்பு: ஆவணங்களின் சரியான பட்டியல் மாவட்ட வாரியான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பொறுத்து மாறுபடலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்:
| மாவட்டம் | அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் |
| செங்கல்பட்டு | Click Here |
| திருவாரூர் | Click Here |
| திருவள்ளூர் | Click Here |
| விருதுநகர் | Click Here |
| இராமநாதபுரம் | Click Here |
| நாமக்கல் | Click Here |
| காஞ்சிபுரம் | Click Here |
| கள்ளக்குறிச்சி | Click Here |
பிற மாவட்டங்களில் இதே பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகும் போது, அந்த மாவட்டங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடிப்படையில் தகவல்கள் புதுப்பிக்கப்படலாம்.
TN DCPU Recruitment 2026 – FAQ
TN DCPU Recruitment 2026-ல் என்னென்ன பணியிடங்கள் உள்ளன?
Assistant – Bench Clerk, Junior Assistant – Bench Clerk மற்றும் Office Assistant உள்ளிட்ட பணியிடங்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
TN DCPU பணிகளுக்கு என்ன கல்வித் தகுதி வேண்டும்?
பதவியைப் பொறுத்து 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் Any Degree வரை கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Assistant – Bench Clerk பணிக்கு என்ன கல்வித் தகுதி?
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Bachelor Degree பெற்றிருக்க வேண்டும். Computer Qualification மற்றும் தமிழ்/ஆங்கில தட்டச்சுச் சான்றிதழ் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
Junior Assistant – Bench Clerk பணிக்கு என்ன கல்வித் தகுதி?
10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Computer Proficiency அவசியம். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சுச் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
Office Assistant பணிக்கு என்ன கல்வித் தகுதி?
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN DCPU Recruitment 2026-ல் சம்பளம் எவ்வளவு?
Assistant – Bench Clerk பணிக்கு ₹25,000, Junior Assistant – Bench Clerk பணிக்கு ₹20,000, Office Assistant பணிக்கு ₹13,000 மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
TN DCPU வேலைக்கு வயது வரம்பு என்ன?
பதவிகளுக்கு பொதுவாக 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இறுதி வயது தகுதியை சம்பந்தப்பட்ட மாவட்ட அறிவிப்பில் சரிபார்க்க வேண்டும்.
TN DCPU Recruitment 2026-க்கு விண்ணப்பக் கட்டணம் உள்ளதா?
இல்லை. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
TN DCPU Recruitment 2026-ல் தேர்வு முறை எப்படி இருக்கும்?
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TN DCPU Recruitment 2026-க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியுமா?
இந்த அறிவிப்புகளின்படி, சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தபால் மூலமாகவோ அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
TN DCPU Recruitment 2026, TN DCPU Jobs 2026, DCPU Recruitment 2026 Tamil Nadu, District Child Protection Unit Recruitment 2026, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2026, DCPU வேலைவாய்ப்பு 2026, தமிழ்நாடு மாவட்ட வாரியாக அரசு வேலைவாய்ப்பு 2026, Juvenile Justice Board Recruitment 2026, 8ஆம் வகுப்பு அரசு வேலை 2026, 10ஆம் வகுப்பு அரசு வேலை 2026, Any Degree அரசு வேலை 2026, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2026, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2026,
Hashtags: #TNDCPURecruitment2026 #DCPURecruitment2026 #DCPUJobs2026 #DistrictChildProtectionUnit #மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலுவலகம் #DCPUவேலைவாய்ப்பு2026 #தமிழ்நாடுஅரசுவேலைவாய்ப்பு2026 #மாவட்டவாரியாகஅரசுவேலை #OfficeAssistantJobs #JuniorAssistantJobs #BenchClerkJobs #8thPassJobs #10thPassJobs #AnyDegreeJobs #GovernmentJobs2026 #TNGovtJobs #TamilnaduJobs #JuvenileJusticeBoard


