TNSLRM Erode Recruitment 2026

தேர்வு கிடையாது! 12-வது முடித்திருந்தால் ஈரோடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் அரசு வேலை – 120 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TNSLRM Erode Recruitment 2026

TNSLRM Erode Recruitment 2026: தமிழ்நாடு அரசு, ஈரோடு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்) மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராம ஊராட்சி அளவில் காலியாக உள்ள 120 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், காலிப்பணியிடம் உள்ள உள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 15.06.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்; இதற்கான வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முழுமையான வழிமுறைகளை இங்கே விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM)
காலியிடங்கள்120
பதவியின் பெயர்சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி15.06.2026
பணியிடம்ஈரோடு மாவட்டம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://erode.nic.in/

தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம் ஆனது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராம ஊராட்சி அளவில் பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

  • சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (Community Bank Coordinator) – 120 காலியிடங்கள்

ஈரோடு மகளிர் திட்டம் வேலைவாய்ப்பு 2026 வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கான தகுதிகள்:

விபரம்தகுதிகள்
கல்வித் தகுதி• 12ஆம் வகுப்பு தேர்ச்சி
• தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும் மற்றும் கணக்கிடும் திறன் உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்
வயது35 வயதுக்குள் இருத்தல் வேண்டும்
அனுபவம்சுய உதவிக்குழு உறுப்பினராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
பிற தகுதிகள்• ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சார்ந்த பெண் சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
• மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும்.
• கணினி திறன் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்த ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
• ஆண்ட்ராய்டு கைபேசி (Android phone) வைத்திருப்பவர்களாகவும், SMS மற்றும் whatsapp- ல் செய்தி அனுப்பவும், செயலி இயக்கும் திறன் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
• வங்கிகளுக்குச் சென்று பரிவர்த்தனைகள் செய்யவும், கடன் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யவும் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
• தகவல் தொடர்பு திறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.”

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விபரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளன

பதவியின் பெயர்வயது வரம்பு விவரங்கள்
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (Community Bank Coordinator)விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2026 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய வரம்பு பின்வருமாறு:

பதவியின் பெயர்சம்பளம்
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் (Community Bank Coordinator)₹2,500 மாதாந்திர அடிப்படை மதிப்பூதியம்

தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.05.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.2026

தமிழ்நாடு அரசு ஈரோடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:

காலிப்பணியிடம் உள்ள ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். தகுதியுள்ள நபர்கள் Community Bank Coordinator பணிக்கு விண்ணப்பிக்க தங்களது முழு விவரங்களுடன் கூடிய Resume / Bio-Data தயாரித்து அனுப்ப வேண்டும். Resume-ல் விண்ணப்பதாரரின் முழுப்பெயர், தந்தை / கணவர் பெயர், பிறந்த தேதி, வயது, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, கல்வித் தகுதி, சுய உதவி குழு அனுபவம், பணியாற்றிய அனுபவம் மற்றும் பிற திறன்கள் போன்ற அனைத்து விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

மேலும், Resume-உடன் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல், சாதிச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், சுய உதவி குழு உறுப்பினர் சான்று மற்றும் தேவையான பிற ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் நேரிலோ அல்லது தபாலிலோ சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 15.06.2026 ஆம் தேதிக்குள் அனுப்ப தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஊராட்சி அளவிலான காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தினை அணுகி தகவல் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top