Coimbatore One Stop Centre Recruitment 2026

8வது தேர்ச்சி போதும்…தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை – ரூ.10,000 சம்பளம் || தேர்வு கிடையாது! Coimbatore One Stop Centre Recruitment 2026

Coimbatore One Stop Centre Recruitment 2026: தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள Case Worker, IT Admin, Security மற்றும் Multipurpose Helper ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு (Degree) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 30.05.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பதவிகளுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விரிவான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம்
வேலை பெயர்Case Worker, IT Admin, Security, Multipurpose Helper
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி30.05.2026
பணியிடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://coimbatore.nic.in/
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் (Post Name)காலியிடங்கள்
Case Worker13
IT Admin01
Security05
Multipurpose Helper07

தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர் (Post Name)கல்வித் தகுதி (Educational Qualification)
Case WorkerBSW, B.A. Sociology, M.A/M.Sc Sociology, Psychology/Clinical Psychology, MSW (PG)
IT AdminGraduate with Diploma in Computer/IT
Security8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு (தேர்ச்சி / தோல்வி)
Multipurpose Helper8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு (தேர்ச்சி / தோல்வி)

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். அதாவது, 21 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட தகுதியுடைய நபர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் உங்களுடைய வயது வரம்பு இந்த நிபந்தனைக்குள் வருகிறதா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக உறுதிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவியின் பெயர் (Post Name)மாதச் சம்பளம்
Case Worker₹18,800/- சம்பளம் வழங்கப்படும்
IT Admin₹20,000/- சம்பளம் வழங்கப்படும்
Security₹12,000/- சம்பளம் வழங்கப்படும்
Multipurpose Helper₹10,000/- சம்பளம் வழங்கப்படும்

தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அவர்களின் தகுதியின் அடிப்படையில், நேர்காணல் (Interview) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.05.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2026 (மாலை 5.00 மணிக்குள்)

இந்த வேலைவாய்ப்பிற்குத் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தைத் தபால் (Offline/Post) மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முறை கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது:

  • படிவம் பதிவிறக்கம் செய்தல்: முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://coimbatore.nic.in/notice_category/recruitment/ பக்கத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் (Download) செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
  • விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தல்: பதிவிறக்கம் செய்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் (பெயர், கல்வித் தகுதி, முகவரி போன்றவை) பிழையின்றிச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
  • சான்றிதழ்களை இணைத்தல்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், வயதுச் சான்று மற்றும் இதர தேவையான சான்றுகளின் நகல்களை (Xerox Copies) சுயசான்றொப்பம் (Self-Attested) செய்து இணைக்க வேண்டும்.
  • தபாலில் அனுப்புதல்: தயாரான விண்ணப்பக் கவரை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் வளாகம், பழைய கட்டிடம், தரை தளம், கோயம்புத்தூர் – 641018. 📞 தொடர்பு எண்: 0422-2305156

⚠️ முக்கியக் குறிப்பு: உங்கள் விண்ணப்பங்கள் அனைத்தும் 30.05.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றடைய வேண்டும். அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை (Original Certificates) எக்காரணம் கொண்டும் இணைத்து அனுப்பக் கூடாது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top