TNSLRM Recruitment 2026

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக தமிழ்நாடு ஊராக வாழ்வாதார இயக்கத்தில் வேலை -டிகிரி தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.15,000/- TNSLRM Recruitment 2026

TNSLRM Recruitment 2026: தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSLRM) காலியாக உள்ள 219-க்கும் மேற்பட்ட Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்) மற்றும் Block Mission Manager (வட்டார இயக்க மேலாளர்) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊரக வளர்ச்சித் துறையில் ஆர்வமுள்ள பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 16.02.2026 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதிய விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முழுமையான தகவல்களைக் கீழே விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM)
பதவியின் பெயர்Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்)
Block Mission Manager (வட்டார இயக்க மேலாளர்)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி16.02.2026
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்

தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கான முக்கிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

  • Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்)
  • Block Mission Manager (வட்டார இயக்க மேலாளர்)

மாவட்ட வாரியான காலியிட விவரங்கள்:

மாவட்டம்காலியிடங்கள்
மதுரை15
கோவை28
தூத்துக்குடி28
விருதுநகர்23
ஈரோடு23
திருநெல்வேலி22
நாமக்கல்18
திண்டுக்கல்14
சேலம்13
திருப்பூர்11
கரூர்08
தர்மபுரி07
திருச்சி06
நாகப்பட்டினம்03
சிவகங்கைபல்வேறு
தேனிபல்வேறு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்) கல்வித் தகுதி:

  1. விண்ணப்பதாரர்கள்ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி (Any Degree) மற்றும் M.S Office-ல் குறைந்தது 3 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. சுய உதவிக் குழு /ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
  3. இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். இரு சக்கர வாகனம் நன்றாக இயக்கத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

Block Mission Manager (வட்டார இயக்க மேலாளர்) கல்வித் தகுதி:

  1. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி (Any Degree) மற்றும் M.S Office-ல் குறைந்தது 3 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
  2. சுய உதவிக் குழு /ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும்
  3. இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். இரு சக்கர வாகனம் நன்றாக இயக்கத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்வயது வரம்பு விவரங்கள்
Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்)18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Block Mission Manager (வட்டார இயக்க மேலாளர்)18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) வேலைவாய்ப்பு 2025-ன் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய வரம்பு பின்வருமாறு:

பதவியின் பெயர்சம்பளம்
Block Coordinator (வட்டார ஒருங்கிணைப்பாளர்)மாதம் Rs.12,000/-
Block Mission Manager (வட்டார இயக்க மேலாளர்)மாதம் Rs.15,000/-

தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.02.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.02.2026

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:

1. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல்

  • முதலில், உங்கள் மாவட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ லிங்க் மூலம் விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் செய்யவும்.
  • பதிவிறக்கம் செய்த படிவத்தை ஒரு தெளிவான பிரிண்ட் அவுட் (Printout) எடுத்துக் கொள்ளவும்.

2. விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தல்

  • விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை (பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித் தகுதி போன்றவை) பிழையில்லாமல் பூர்த்தி செய்யவும்.
  • சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டவும்.

3. தேவையான ஆவணங்களை இணைத்தல்

விண்ணப்பத்துடன் பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை (Photocopies) இணைக்க வேண்டும்:

  • கல்வித் தகுதி சான்றிதழ்கள் (Educational Certificates).
  • சாதிச் சான்றிதழ் (Community Certificate).
  • முன்னனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ் (Experience Certificate).
  • இருப்பிடச் சான்று / ஆதார் கார்டு நகல்.

4. விண்ணப்பத்தை அனுப்புதல்

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை ஒரு உறையில் (Envelope) வைத்து, உங்கள் மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

மாவட்டம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
மதுரை ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
திருச்சி ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
மதுரை ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
திண்டுக்கல் ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
விருதுநகர் ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
சேலம் ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
கரூர் ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
தூத்துக்குடி ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
திருநெல்வேலி ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
நாமக்கல் ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
நாகப்பட்டினம் ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
தர்மபுரி ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
ஈரோடு ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
கோவை ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
சிவகங்கைClick here
திருப்பூர் ஊரக வாழ்வாதார இயக்கம் Click here
தேனிClick here
பிற மாவட்டங்களுக்கு விரைவில் பதிவிடப்படும்
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top