TNNLU Recruitment 2025: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள 06 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 18.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNNLU Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | Tamil Nadu National Law University தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் |
காலியிடங்கள் | 06 |
பணிகள் | இளநிலை உதவியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 18.06.2025 |
பணியிடம் | திருச்சி, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnnlu.ac.in/ |
TNNLU Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி | காலியிடங்கள் |
இளநிலை உதவியாளர் (Junior Assistant) | 05 |
இளநிலை உதவியாளர் (கணக்குகள்) (Junior Assistant – Accounts) | 01 |
மொத்தம் | 06 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNNLU Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
Junior Assistant (இளநிலை உதவியாளர்) கல்வித் தகுதி:
ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும். அரசு தட்டச்சு தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில்,
- தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் Higher Grade; அல்லது
- தமிழில் Higher Grade மற்றும் ஆங்கிலத்தில் Lower Grade; அல்லது
- ஆங்கிலத்தில் Higher Grade மற்றும் தமிழில் Lower Grade. (குறிப்பு: இரண்டு மொழிகளிலும் உயர் தரம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதற்கு அடுத்தபடியாக தமிழில் உயர் தரம் மற்றும் ஆங்கிலத்தில் தாழ்ந்த தரம் பெற்றவர்களுக்கும், இறுதியாக ஆங்கிலத்தில் உயர் தரம் மற்றும் தமிழில் தாழ்ந்த தரம் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.)
Junior Assistant (Accounts) இளநிலை உதவியாளர் கல்வித் தகுதி:
வணிகவியலில் (Commerce) பட்டப்படிப்புடன், Tally ERP 9.0 Professional Accounting Course Certificate மற்றும் அதற்கான வேலை அனுபவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அரசு தட்டச்சு தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில்,
- தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் Higher Grade; அல்லது
- தமிழில் Higher Grade மற்றும் ஆங்கிலத்தில் Lower Grade; அல்லது
- ஆங்கிலத்தில் Higher Grade மற்றும் தமிழில் Lower Grade. (குறிப்பு: இரண்டு மொழிகளிலும் உயர் தரம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதற்கு அடுத்தபடியாக தமிழில் உயர் தரம் மற்றும் ஆங்கிலத்தில் தாழ்ந்த தரம் பெற்றவர்களுக்கும், இறுதியாக ஆங்கிலத்தில் உயர் தரம் மற்றும் தமிழில் தாழ்ந்த தரம் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.)
Tamil Nadu National Law University Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
பதவி | வயது வரம்பு |
இளநிலை உதவியாளர் (Junior Assistant) | 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
இளநிலை உதவியாளர் (கணக்குகள்) (Junior Assistant – Accounts) | 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். |
சம்பளம் விவரங்கள்
பதவி | சம்பளம் |
ஜூனியர் உதவியாளர் (Junior Assistant) | ரூ. 19,500/- |
ஜூனியர் உதவியாளர் (கணக்குகள்) (Junior Assistant – Accounts) | ரூ. 19,500/- |
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 இளநிலை உதவியாளர் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ. 500/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இந்தக் கட்டணத்தை (Demand Draft – DD) மூலம் செலுத்த வேண்டும். வரைவோலையானது “The Registrar, Tamil Nadu National Law University” என்ற பெயரில் திருச்சிராப்பள்ளியில் (Tiruchirappalli) செலுத்தப்பட வேண்டும்.
TNNLU Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 -பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை திருச்சி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnnlu.ac.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 03.06.2025 முதல் 18.06.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: “The Registrar, Tamil Nadu National Law University, Navalurkuttappattu, Dindigul Main Road, Tiruchirappalli – 620027”
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |