TNCMGFP Recruitment 2025: தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் காலியாக உள்ள 38 Green Fellows (பசுமை தோழர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNCMGFP Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | Tamilnadu Chief Minister’s Green Fellowship Programme (TNCMGFP) |
காலியிடங்கள் | 38 |
பணிகள் | Green Fellows (பசுமை தோழர்) |
பணியிடம் | தமிழ்நாடு |
கடைசி தேதி | 07.06.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.environment.tn.gov.in/ |
TNCMGFP Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Green Fellows (பசுமை தோழர்) | 38 |
மொத்தம் | 38 |
TNCMGFP Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வி தகுதி |
Green Fellows (பசுமை தோழர்) | அரசு அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் 70% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு டிகிரி ( UG Degree ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Post-Graduate degree in Life Sciences, Environmental Sciences /Management, Ecology/Forestry/Wildlife/ Public Policy/Environmental Engineering with minimum aggregate score of 70% (or) an equivalent CGPA. ர |
TNCMGFP Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் Green Fellows (பசுமை தோழர்) பணியிடத்திற்கு மாதச் சம்பளமாக ₹65,000 வழங்கப்படும். இதோடு கூடுதலாக, பயணச் செலவுகளுக்காக மாதம் ₹10,000 வரை வழங்கப்படும். ஆக மொத்தம், ஒரு மாதத்திற்கு ₹75,000 வரை வருமானம் பெறலாம்.
வயது வரம்பு விவரங்கள்
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 07.06.2025 தேதியின்படி 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, SC/ST விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மேற்படாதவராக இருந்தால் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
TNCMGFP Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNCMGFP Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வு திட்டத்தில் பணிபுரியத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://environment.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தேவையான ஆவணங்களையும் இணைத்து, ஆன்லைன் மூலமாகத் தங்களது விண்ணப்பங்களை 07.06.2025 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |