TN Stationery and Printing Department Recruitment 2026

தமிழ்நாடு அரசு எழுதுப்பொருள் மற்றும் அச்சுத் துறையில் வேலை – மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் || தேர்வு கிடையாது! TN Stationery and Printing Department Recruitment 2026

TN Stationery and Printing Department Recruitment 2026: தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள 23 பணியிடங்களை (Assistant Offset Machine Technician, Junior Electrician, Junior Mechanic, Plumber – Electrician) நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 08.04.2026 அன்று மாலை 5:30 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை
Department of Stationery and Printing, Tamilnadu 
காலியிடங்கள்23
பணிகள்Assistant Offset Machine Technician, Junior Electrician, Jun
ior Mechanic, Plumber – Electrician
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி08.04.2026
பணியிடம்சென்னை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
 https://www.stationeryprinting.tn.gov.in/

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்மொத்த இடங்கள்
அசிஸ்டென்ட் ஆப்செட் மெஷின் டெக்னீஷியன் (Assistant Offset Machine Technician)10
ஜூனியர் எலக்ட்ரீஷியன் (Junior Electrician)04
ஜூனியர் மெக்கானிக் (Junior Mechanic)08
பிளம்பர் – எலக்ட்ரீஷியன் (Plumber – Electrician)01
மொத்த காலிப்பணியிடங்கள்23

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வித்தகுதி (Qualification)
அசிஸ்டென்ட் ஆப்செட் மெஷின் டெக்னீஷியன் (Assistant Offset Machine Technician)1. குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி.
2. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அச்சுத் தொழில்நுட்பத்தில் பட்டயப் படிப்பு (Diploma in Printing Technology) அல்லது லித்தோ ஆப்செட் மெஷினில் தொழில்நுட்ப வர்த்தகச் சான்றிதழ் (Technical Trade Certificate in Litho Offset Machine).

அனுபவம் (Experience)

1. டிப்ளமோ முடித்தவர்கள்: புகழ்பெற்ற அச்சுக்கூடத்தில் ஆப்செட் அச்சு இயந்திரத்தை இயக்குவதில் குறைந்தபட்சம் ஒரு வருடம் அனுபவம்.
2. வர்த்தகச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்: புகழ்பெற்ற அச்சுக்கூடத்தில் ஆப்செட் அச்சு இயந்திரத்தை இயக்குவதில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம்.
ஜூனியர் எலக்ட்ரீஷியன் (Junior Electrician)1. S.S.L.C (பத்தாம் வகுப்பு) தேர்ச்சி.
2. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பொருத்தமான தொழில்நுட்ப வர்த்தகச் சான்றிதழ் (Technical Trade Certificate – ITI) பெற்றிருக்க வேண்டும் மற்றும் தொழிற்பழகுநர் சட்டம், 1961-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தொழிற்பழகுநர் காலத்தை முடித்திருக்க வேண்டும்.
(அல்லது)
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் (Directorate of Technical Education) வழங்கப்பட்ட எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் பட்டயப் படிப்பு (Diploma in Electrical and Electronics Engineering).
ஜூனியர் மெக்கானிக் (Junior Mechanic)1. S.S.L.C (பத்தாம் வகுப்பு) தேர்ச்சி.
2. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பொருத்தமான தொழில்நுட்ப வர்த்தகச் சான்றிதழ் (Technical Trade Certificate – ITI) பெற்றிருக்க வேண்டும் மற்றும் தொழிற்பழகுநர் சட்டம், 1961-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட குறைந்தபட்ச தொழிற்பழகுநர் காலத்தை முடித்திருக்க வேண்டும்.
(அல்லது)
தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் (Directorate of Technical Education) வழங்கப்பட்ட மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டயப் படிப்பு (Diploma in Mechanical Engineering).
பிளம்பர் – எலக்ட்ரீஷியன் (Plumber – Electrician)1. S.S.L.C (பத்தாம் வகுப்பு) தேர்ச்சி.
2. பிளம்பிங் பிரிவில் தொழில்நுட்ப வர்த்தகச் சான்றிதழ் (Technical Trade Certificate – ITI) பெற்றிருக்க வேண்டும்.
வகுப்பு (Class)குறைந்தபட்ச வயதுஅதிகபட்ச வயது
OC (பொதுப் பிரிவு)1832
SC / SCA / ST1837
MBC & DNC, BC1834
PwBD (மாற்றுத்திறனாளிகள்)1842
ஆதரவற்ற விதவைகள் (Destitute Widow)1837
பதவியின் பெயர்சம்பள விகிதம் (நிலை 8)
அசிஸ்டென்ட் ஆப்செட் மெஷின் டெக்னீஷியன் (Assistant Offset Machine Technician)ரூ. 19,500 – ரூ. 71,900/-
ஜூனியர் எலக்ட்ரீஷியன் (Junior Electrician)ரூ. 19,500 – ரூ. 71,900/-
ஜூனியர் மெக்கானிக் (Junior Mechanic)ரூ. 19,500 – ரூ. 71,900/-
பிளம்பர் – எலக்ட்ரீஷியன் (Plumber – Electrician)ரூ. 19,500 – ரூ. 71,900/-
மொத்த காலிப்பணியிடங்கள்சம்பள நிலை: Level 8

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

  • பரிசீலனை: பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதியானவர்கள் மட்டும் சுருக்கப்பட்டியலில் (Shortlisting) சேர்க்கப்படுவர்.
  • தேர்வுகள்: பணியிடத்திற்கு ஏற்ப எழுத்துத் தேர்வு (Written Test) அல்லது திறன் தேர்வு (Skill Test) நடத்தப்படும்.
  • சரிபார்ப்பு: இறுதியாக அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 06.03.2026
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2026

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் சுய சான்றொப்பம் (Self-Attested) இடப்பட்ட நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், உங்கள் விண்ணப்பங்களை 08.04.2026 மாலை 05:30 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முக்கிய வழிமுறைகள்:

  • புகைப்படம்: விண்ணப்பத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். புகைப்படத்தின் மேல் பகுதியில் விண்ணப்பதாரர் குறுக்காக சுய சான்றொப்பம் (Sign across the photo) இட வேண்டும்.
  • அஞ்சல் உறை (Envelope): விண்ணப்பம் அனுப்பும் உறையின் மேல் “Employment Application – (விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்)” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர், எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை, ஆணையர் அலுவலகம், 110, அண்ணா சாலை, சென்னை – 600 002.

தேவையான ஆவணங்கள் (சுய சான்றொப்பமிட்ட நகல்கள்):

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியல்:

  1. கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.
  2. பணி அனுபவச் சான்றிதழ் (உதவி ஆப்செட் மெஷின் டெக்னிஷியன் பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும்).
  3. மாற்றுச் சான்றிதழ் (TC).
  4. சாதிச் சான்றிதழ் (Community Certificate).
  5. முன்னுரிமைச் சான்றிதழ் (Priority Certificate – பொருந்தினால் மட்டும்).
  6. PSTM சான்றிதழ் (தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று).
  7. வயது வரம்பிற்கான சான்று (Age Proof).
  8. முகவரிச் சான்று (Address Proof).
  9. இதர தகுதிச் சான்றிதழ்கள் (ஏதேனும் இருப்பின்).
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top