TN Stationery and Printing Department Recruitment 2025: தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள 56 Junior Electrician, Junior Mechanic, Assistant Offset Machine Technician, Plumber Cum Electrician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 19.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
TN Stationery and Printing Department Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
| துறைகள் | தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை |
| காலியிடங்கள் | 56 |
| பணிகள் | Junior Electrician, Junior Mechanic, Assistant Offset Machine Technician, Plumber Cum Electrician |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 19.09.2025 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.stationeryprinting.tn.gov.in/ |
TN Stationery and Printing Department Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி | காலியிடங்கள் |
| Assistant Offset Machine Technician | 19 |
| Junior Electrician | 14 |
| Junior Mechanic | 22 |
| Plumber Cum Electrician | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN Stationery and Printing Department Recruitment 2025 கல்வித் தகுதி
| பதவி | கல்வித் தகுதி |
| Assistant Offset Machine Technician | 1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி 2. அச்சுத் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ அல்லது லித்தோ ஆஃப்செட் மெஷின் வர்த்தகச் சான்றிதழ். |
| Junior Electrician | 1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி 2. எலக்ட்ரீஷியன் வர்த்தகச் சான்றிதழ் அல்லது பயிற்சிச் சட்டத்தின் கீழ் பயிற்சி. |
| Junior Mechanic | 1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி 2. மெக்கானிக் வர்த்தகச் சான்றிதழ் அல்லது பயிற்சிச் சட்டத்தின் கீழ் பயிற்சி. |
| Plumber Cum Electrician | 1. பத்தாம் வகுப்பு தேர்ச்சி 2. பிளம்பரிங் பிரிவில் தொழில்நுட்ப வர்த்தகச் சான்றிதழ் (ITI). |
TN Stationery and Printing Department Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
- SCA, SC, ST, ஆதரவற்ற விதவை : 18 முதல் 37 வயது வரை
- BC, MBC, DNC : 18 முதல் 34 வயது வரை
- OC : 18 முதல் 32 வயது வரை
- மாற்றுத் திறனாளிகள் : 18 முதல் 42 வயது வரை
TN Stationery and Printing Department Recruitment 2025 சம்பள விவரங்கள்
| பணியின் விவரம் | சம்பளம் |
| Assistant Offset Machine Technician | ரூ.19,500 – ரூ.71,900/- (மாதம்) |
| Junior Electrician | ரூ.19,500 – ரூ.71,900/- (மாதம்) |
| Junior Mechanic | ரூ.19,500 – ரூ.71,900/- (மாதம்) |
| Plumber Cum Electrician | ரூ.19,500 – ரூ.71,900/- (மாதம்) |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
TN Stationery and Printing Department Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
TN Stationery and Printing Department Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கியமான தேதிகள்
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 18.08.2025
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2025
TN Stationery and Printing Department Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் 2025 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்பலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை:
- கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்விச் சான்றிதழ்கள்
- அனுபவச் சான்றிதழ் (உதவி ஆஃப்செட் மிஷின் டெக்னீஷியன் பதவிக்கு மட்டும்)
- மாற்றுச் சான்றிதழ் (TC)
- சாதிச் சான்றிதழ்
- முன்னுரிமைக்கான (Priority) சான்றிதழ்
- தமிழ் வழிக் கல்வி (PSTM) சான்றிதழ்
- பிறப்பு மற்றும் வயதுச் சான்றிதழ்
- முகவரிச் சான்றிதழ்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
மேற்கண்ட அனைத்து ஆவணங்களின் சுய சான்றிட்ட நகல்களுடன், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஒரு உறையில் வைத்து, அதன் மேல் “வேலைவாய்ப்பு விண்ணப்பம் – (விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்)” என்று குறிப்பிட்டு, செப்டம்பர் 19, 2025, மாலை 5:30 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர்,
எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகம்,
110, அண்ணா சாலை, சென்னை-2.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |









