TN SDAT Recruitment 2026

ரூ.35,600 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – 34 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TN SDAT Recruitment 2026

TN SDAT Recruitment 2026: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் Sports Development Authority of Tamil Nadu (SDAT)  தற்போது காலியாக உள்ள 34 Coach பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டுத் துறையில் ஆர்வமும், தகுந்த பயிற்சியும் கொண்ட நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 25.01.2026 ஆகும். இந்தப் பணிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொண்டு, தகுதியுள்ளவர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
அறிவிப்பு வெளியிட்ட துறைSports Development Authority of Tamil Nadu (SDAT) 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT)
காலியிடங்கள்34
பணிகள்Coach
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி25.01.2026 at 05.00 PM
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.sdat.tn.gov.in/

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2026, பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:

பணியின் பெயர்காலியிடங்கள்
Coach30
Coach – Para04

விளையாட்டு வாரியான காலியிடங்கள்:

DisciplineTotal Vacancy
Archery1
Athletics4
Badminton1
Basketball1
Boxing1
Canoeing and Kayaking1
Cycling2
Fencing2
Football1
Gymnastics1
Hockey1
Judo1
Kabaddi2
Para – Athletics1
Para – Badminton1
Para – Powerlifting1
Swimming2
Swimming – Diving1
Table Tennis1
Taekwondo2
Tennis1
Volleyball1
Weightlifting3
Wheelchair Fencing1
34

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பயிற்சியாளர் (Coach):

UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் பயின்று பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும்.

தொழில்முறைத் தகுதி (கீழே உள்ளவற்றில் ஏதேனும் ஒன்று):

  • தேசிய விளையாட்டு நிறுவனம் (NIS) / இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) வழங்கிய குறைந்தது 10 மாத கால விளையாட்டு பயிற்சியாளர் டிப்ளமோ (Diploma in Sports Coaching) சான்றிதழ்.
  • தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (TNPESU) பெற்ற விளையாட்டு பயிற்சியாளர் முதுகலை டிப்ளமோ (PG Diploma in Sports Coaching).
  • குவாலியர் லக்ஷ்மிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் (LNIPE) பெற்ற விளையாட்டு பயிற்சியாளர் முதுகலை டிப்ளமோ (PG Diploma in Sports Coaching).

விளையாட்டுத் தகுதி:

  • தேசியப் பள்ளி விளையாட்டுப் போட்டிகள் (National School Games) அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்றிருக்க வேண்டும்.
  • அல்லது தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சார்பாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

பாரா பயிற்சியாளர் (Coach – Para):

  • கல்வித் தகுதி: UGC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Bachelor’s Degree).
  • விளையாட்டுத் தகுதி: மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (MYAS) அல்லது அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்புகள் நடத்திய போட்டிகளில் தமிழ்நாடு மாநிலத்தின் சார்பாகப் பங்கேற்றிருக்க வேண்டும்.

பயிற்சியாளர் (Coach):

  • பிரிவு: SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs: வயது வரம்பு: 21 முதல் 50 ஆண்டுகள் வரை
  • பிரிவு: “Others” (இதர பிரிவினர் – பொதுப் பிரிவு): வயது வரம்பு: 21 முதல் 45 ஆண்டுகள் வரை
  • பிரிவு: ஆதரவற்ற விதவைகள் (Destitute Widow): வயது வரம்பு: 21 முதல் 50 ஆண்டுகள் வரை

பாரா பயிற்சியாளர் (Coach – Para):

  • பிரிவு: மாற்றுத்திறனாளிகள் (Persons with Benchmark Disability): வயது வரம்பு: 21 முதல் 55 ஆண்டுகள் வரை

குறிப்பு: இந்த வயது வரம்பு 01.07.2026 அன்றைய தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசின் ஊதிய நிலை 12 (Level 12)-ன் படி சம்பளம் வழங்கப்படும்.

பதவி (Post)ஊதிய விகிதம் (Pay Scale)
பயிற்சியாளர் (Coach)Rs.35,600 – Rs.1,30,800
பாரா பயிற்சியாளர் (Para Coach)Rs.35,600 – Rs.1,30,800

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புத் தேர்வு செயல்முறையை பல்வேறு நிலைகளாகப் பிரித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் தொழில்முறை கல்வித் தகுதி (Professional Qualification) மற்றும் அவர்கள் விளையாட்டுத் துறையில் பெற்ற பதக்கங்கள் (Medals) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பதாரரின் பயிற்சி அளிக்கும் அனுபவம் (Coaching Experience) மற்றும் விளையாட்டுகள் குறித்த பொதுவான அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் விளையாட்டு பொது அறிவுத் தேர்வு (Sports General Awareness) நடத்தப்படும்.

முக்கியமாக, விண்ணப்பதாரர்கள் தகுதி பெறுவதற்கு தமிழ் மொழித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். இறுதித் தேர்வாக, அந்தந்த விளையாட்டுப் பிரிவு சார்ந்த திறன் மதிப்பீடு மற்றும் நேர்காணல் (Viva-voce) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Professional Qualification
  • Medals received in the sporting discipline
  • Coaching Experience 
  • Tamil Test (Minimum 40% score to be obtained to qualify)
  • Sports General awareness
  • Discipline specific Performance Evaluation (including viva voice)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.01.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2026

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், தேவையான அனைத்து ஆவணங்களுடன் 05.01.2026 முதல் 25.01.2026 தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.sdat.tn.gov.in/ இணையத்தில் சென்று “Register as New User ” பட்டனை கிளிக் செய்து Register செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click Here
விண்ணப்ப படிவம் PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top