TN Post Office GDS Recruitment 2026

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 – 2019 காலியிடங்கள்; 10வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! TN Post Office GDS Recruitment 2026

TN Post Office GDS Recruitment 2026: இந்திய அஞ்சல் துறை 2026 – ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அஞ்சல் அலுவலங்களில் காலியாக உள்ள 2019 Gramin Dak Sevaks (GDS) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.02.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்இந்திய அஞ்சல் துறை
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ்
காலியிடங்கள்2019
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி16.02.2026
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://indiapost.gov.in/gdsonlineengagement

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Gramin Dak Sevaks (GDS) – 2019 காலியிடங்கள்

தமிழ்நாடு கோட்ட வாரியான காலிப்பணியிட விவரங்கள்:

கோட்டம் (Division)காலிப்பணியிடங்கள் (Posts)
அரக்கோணம் கோட்டம்41
செங்கல்பட்டு கோட்டம்60
சென்னை சிட்டி சென்ட்ரல் கோட்டம்03
சென்னை சிட்டி நார்த் கோட்டம்01
சென்னை சிட்டி சவுத் கோட்டம்11
சென்னை சார்டிங் கோட்டம்03
கோயம்புத்தூர் கோட்டம்30
கடலூர் கோட்டம்56
தர்மபுரி கோட்டம்45
திண்டுக்கல் கோட்டம்61
ஈரோடு கோட்டம்61
காஞ்சிபுரம் கோட்டம்55
கன்னியாகுமரி கோட்டம்34
காரைக்குடி கோட்டம்15
கரூர் கோட்டம்43
கோவில்பட்டி கோட்டம்50
கிருஷ்ணகிரி கோட்டம்51
கும்பகோணம் கோட்டம்56
மதுரை கோட்டம்47
மயிலாடுதுறை கோட்டம்30
நாகப்பட்டினம் கோட்டம்42
நாமக்கல் கோட்டம்65
நீலகிரி கோட்டம்42
பட்டுக்கோட்டை கோட்டம்37
பொள்ளாச்சி கோட்டம்45
பாண்டிச்சேரி கோட்டம்75
புதுக்கோட்டை கோட்டம்40
இராமநாதபுரம் கோட்டம்45
ஆர்.எம்.எஸ் (RMS CB) கோட்டம்03
ஆர்.எம்.எஸ் (RMS MA) கோட்டம்14
ஆர்.எம்.எஸ் (RMS M) கோட்டம்08
ஆர்.எம்.எஸ் (RMS T) கோட்டம்12
சேலம் கிழக்கு கோட்டம்46
சேலம் மேற்கு கோட்டம்40
சிவகங்கை கோட்டம்34
ஸ்ரீரங்கம் கோட்டம்45
தாம்பரம் கோட்டம்71
தஞ்சாவூர் கோட்டம்58
தேனி கோட்டம்36
திருச்சிராப்பள்ளி கோட்டம்65
திருநெல்வேலி கோட்டம்50
திருப்பத்தூர் கோட்டம்44
திருப்பூர் கோட்டம்95
திருவண்ணாமலை கோட்டம்99
தூத்துக்குடி கோட்டம்39
வேலூர் கோட்டம்29
விருதுநகர் கோட்டம்33
விருத்தாச்சலம் கோட்டம்54

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் விஇந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள் இதோ:

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மொழித் திறன்: விண்ணப்பதாரர் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் (உள்ளூர் மொழி அறிவு அவசியம்).
  • கணினி அறிவு: அடிப்படை கணினி பயிற்சி சான்றிதழ் அல்லது கணினி இயக்கத் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படுகிறது.
  • மிதிவண்டி ஓட்டும் திறன்: தபால்களை விநியோகம் செய்ய மிதிவண்டி (Cycling) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். (இருசக்கர வாகன உரிமம் வைத்திருப்பவர்களும் தகுதியானவர்களே).

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு

பிரிவுவயது வரம்பு தளர்வு
SC/ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (Gen/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
Ex-Servicemenஅரசாங்க கொள்கைப்படி

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.12,000/- முதல் ரூ.29,380/- வரை சம்பளம் வழங்கப்படும். உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ரூ.10,000/- முதல் ரூ.24,470/- வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2026 பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின்பு அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும்..மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • SC/ST/PWD/Female Candidates/Transwomen விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 31.01.2026
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.02.2026

தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 31.01.2026 முதல் 14.02.2026 தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ இணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top