TN Litigation Department Recruitment 2026: தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 05 ஓட்டுநர் (Driver) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசுப் பணியில் சேர ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதிய விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்துத் தகவல்களையும் கீழே விரிவாகக் காணலாம்.
TN Litigation Department Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | தமிழ்நாடு அரசு வழக்கு துறை Department of Government Litigation, Tamilnadu |
| காலியிடங்கள் | 05 |
| பணிகள் | ஓட்டுநர் |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 16.02.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tn.gov.in |
TN Litigation Department Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணியின் விவரம் | காலியிடங்கள் |
| ஓட்டுநர் | 05 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN Litigation Department Recruitment 2026 கல்வித் தகுதி
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவத்துடன் கூடிய செல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் (LMV Driving License) வைத்திருக்க வேண்டும்.
TN Litigation Department Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
| பணியின் விவரம் | வயது வரம்பு |
| ஓட்டுநர் | பொதுப் பிரிவு – 18 முதல் 32 வயது வரை BC / MBC – 18 முதல் 34 வயது வரை SC / ST – 18 முதல் 37 வயது வரை |
சம்பள விவரங்கள்
| பணியின் விவரம் | ஊதிய விகிதம் |
| ஓட்டுநர் | மாதத்திற்கு ரூ.19,500 – ரூ.71,900/- |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.02.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.02.2026
TN Litigation Department Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு வழக்காடல் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை “அரசு தலைமை வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை – 600104” (The Advocate General of Tamil Nadu, High Court, Chennai – 600104) என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் ரூ. 70/- க்கான அஞ்சல் வில்லை (Postage Stamp) ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட உறையை (Self-addressed envelope) இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அஞ்சல் மூலமாக 16.02.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் தங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.







