TN Litigation Department Recruitment 2025: தமிழ்நாடு அரசு வழக்கு துறையின் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TN Litigation Department Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு அரசு வழக்கு துறை Department of Government Litigation, Tamilnadu |
காலியிடங்கள் | 16 |
பணிகள் | அலுவலக உதவியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 14.08.2025 at 5:45 PM |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tn.gov.in |
TN Litigation Department Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு வழக்குத் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | 16 |
மொத்தம் | 16 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN Litigation Department Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
TN Litigation Department Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
அரசு வழக்குத் துறையின் அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள், 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 32 ஆகவும், பிசி பிரிவினருக்கு 34 ஆகவும், எம்பிசி/டிசி பிரிவினருக்கு 37 ஆகவும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 37 ஆகவும் இருக்கலாம்.
TN Litigation Department Recruitment 2025 சம்பள விவரங்கள்
அரசு வழக்குத் துறையின் அலுவலக உதவியாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.15,700 – ரூ. 58,100/- (நிலை-1) சம்பளம் வழங்கப்படும்.
TN Litigation Department Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு வழக்குத் துறை அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TN Litigation Department Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு வழக்குத் துறையின் அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அனுப்புவது அவசியம்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- பிறப்பு தேதியைக் குறிப்பிடும் ஏதேனும் ஓர் ஆவணம்
- கல்வித் தகுதிச் சான்றிதழ்
- வகுப்புப் பிரிவுச் சான்றிதழ்
- சிறப்புத் தேவை இருப்பின் அதற்கான சான்றிதழ்
விண்ணப்பப் படிவத்தில் இருக்க வேண்டியவை:
விண்ணப்பத்தில் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, வகுப்புப் பிரிவு, முகவரி, கையொப்பம் மற்றும் புகைப்படம் போன்ற விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்பும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ரூ.50 மதிப்புள்ள தபால் தலை ஒட்டப்பட்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். முறையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள், மற்றும் கடைசித் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய: இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி:
The Advocate General Of Tamil Nadu,
High Court,
Chennai – 600104.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |