Thursday, August 28, 2025
HomeAny Degree Govt Jobsதமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை வேலைவாய்ப்பு 2025 - மாதம் ரூ.40,000/- சம்பளம்!...

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை வேலைவாய்ப்பு 2025 – மாதம் ரூ.40,000/- சம்பளம்! TN Home Prohibition and Excise Department Recruitment 2025

TN Home Prohibition and Excise Department Recruitment 2025: தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் (Home, Prohibition and Excise Department), பல்வேறு Specialists, Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், 25.09.2025 தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய விவரங்களை இங்கே விரிவாகக் காணலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
காலியிடங்கள்பல்வேறு
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் மூலம்
கடைசி தேதி25.09.2025
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tn.gov.in/
பதவியின் பெயர் காலியிடங்கள்
Specialist in Communication, Public Awareness and Capacity Buildingபல்வேறு
Specialist in Data Monitoring & Documentationபல்வேறு
Specialist in Road Safety Aspectsபல்வேறு
Assistantபல்வேறு
Data Entry Operatorபல்வேறு
பதவியின் பெயர் கல்வித் தகுதி
Specialist in Communication, Public Awareness and Capacity Buildingதகவல்தொடர்பு (Communication), இதழியல் (Journalism) அல்லது தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம்.
Specialist in Data Monitoring & Documentationகணினி அறிவியல் (Computer Science), புள்ளியியல் (Statistics), டேட்டா சயின்ஸ் (Data Science), கணிதம் (Mathematics) அல்லது தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம்.
Specialist in Road Safety Aspectsசிவில் இன்ஜினியரிங் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலைப் பட்டம். முதுகலைப் பட்டம் இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.
Assistantஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். முதுகலைப் பட்டம் இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
Data Entry Operatorஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம். முதுகலைப் பட்டம் அல்லது கணினி அப்ளிகேஷன் / தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.
பதவியின் பெயர் சம்பளம்
Specialist in Communication, Public Awareness and Capacity Buildingமாதம் ₹1,50,000/-
Specialist in Data Monitoring & Documentationமாதம் ₹1,50,000/-
Specialist in Road Safety Aspectsமாதம் ₹1,50,000/-
Assistantமாதம் ₹50,000/-
Data Entry Operatorமாதம் ₹40,000/-

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க, கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:

  1. விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்: முதலில், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (Home, Prohibition and Excise Department) உள்ள ‘Announcements’ பக்கத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  2. மின்னஞ்சல் அனுப்பவும்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து tnrsmu2025@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

  • விண்ணப்பதாரரின் சுயவிவரம் (Detailed Curriculum Vitae).
  • கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் (நகல்கள்).
  • பணி அனுபவச் சான்றிதழ்கள் (நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் அல்லது முந்தைய பணி விவரங்கள்).
  • வயது, கல்வி மற்றும் அனுபவம் ஆகியவற்றை நிரூபிக்கும் பிற ஆவணங்கள்.

முக்கிய குறிப்பு:

  • விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ சமர்ப்பித்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படாது.
  • விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்துத் தகுதிகளும் உங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments