தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையில் வேலை; மாதம் ரூ.30,000 சம்பளம், தேர்வு கிடையாது! TN Food Safety Department Recruitment 2024

TN Food Safety Department Recruitment 2024: தமிழக அரசின் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் திட்டமிடல் மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் பிரிவு செயல்படுகிறது. இப்பிரிவில் காலியாகவுள்ள 02 கணினி ஆய்வாளர் மற்றும் தரவு மேலாளர்(System Analyst cum Data Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை
TN Food Safety Department
காலியிடங்கள்02
பணிகணினி ஆய்வாளர் மற்றும் தரவு மேலாளர்
(System Analyst cum Data Manager)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி28.11.2024
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://foodsafety.tn.gov.in/
Join WhatsApp ChannelJoin Now
Join Telegram ChannelJoin Now
WhatsApp Channel Follow
Telegram Channel Join

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலிப்பணியிடம்
கணினி ஆய்வாளர் மற்றும் தரவு மேலாளர்
(System Analyst cum Data Manager)
02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை கணினி ஆய்வாளர் மற்றும் தரவு மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை பொறியியல் (அல்லது) கணினி அறிவியலில் பட்டம் (அல்லது) தகவல் தொழில்நுட்பம் (அல்லது) எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (அல்லது) மல்டி மீடியா மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை 2024-ல் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பதவிக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை 2024-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024 விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ இணையதளமான https://foodsafety.tn.gov.in/ இலிருந்து அல்லது நேரடியாக இந்த இணைப்பிலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் புகைப்படம் ஒட்டி தேவையான ஆவணங்களை இணைத்து அலுவலகத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று அளிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.11.2024.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 
ஆணையர் அலுவலகம்,
உணவு பாதுகாப்புத் துறை,
முதல் மற்றும் இரண்டாம் தளம்,
பழைய மீன்வளத்துறை அலுவலக கட்டிடம்,
டி.எம்.எஸ் வளாகம்,
359, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 6.

விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டு கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

Leave a Comment