TN Cooperative Bank Recruitment 2025: தமிழ்நாடு அரசு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TN கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2025 பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, மற்றும் வயது வரம்பு எவ்வளவு என்பது போன்ற விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
TN Cooperative Bank Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| அறிவிப்பு வெளியிட்ட துறை | தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி |
| காலியிடங்கள் | 50 |
| பணிகள் | உதவியாளர் (Assistant) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 31.12.2025 |
| பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tncoopsrb.in/ |
Tamilnadu Cooperative Bank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025, பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:
| பணியின் விவரம் (Post Name) | காலியிடங்கள் (Vacancies) |
| உதவியாளர் (Assistant) | 50 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN Cooperative Bank Recruitment 2025 கல்வித் தகுதி
| பணியின் விவரம் (Post Name) | கல்வித் தகுதி (Educational Qualification) |
| உதவியாளர் (Assistant) | விண்ணப்பதாரர்கள் Any Degree, B.E/B.Tech, Bachelor’s Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவுப் பயிற்சியை (Diploma in Cooperative Management) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும் (Knowledge in Computer Application)
TN Cooperative Bank Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025: வயது வரம்பு விவரங்கள் (01.07.2025 நிலவரப்படி) கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. இதர வகுப்பினர்கள் (SC, SC(A), ST, MBC/DC, BC(OBCM), BCM தவிர):
- குறைந்தபட்ச வயது: 18 (நிறைவு செய்திருக்க வேண்டும்).
- உச்ச வயது வரம்பு (பொது): 32 (நிறைவு செய்திருக்கக் கூடாது).
வயது வரம்பு சலுகைகள்:
- நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள்: உச்ச வயது வரம்பு 42.
- முன்னாள் இராணுவத்தினர்*: ** உச்ச வயது வரம்பு 50.
- ஆதரவற்ற விதவை: உச்ச வயது வரம்பு இல்லை
2. SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s மற்றும் BCMs பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்:
- குறைந்தபட்ச வயது: 18 (நிறைவு செய்திருக்க வேண்டும்).
- உச்ச வயது வரம்பு (பொது): அதிகபட்ச வயது வரம்பு இல்லை
வயது தளர்வுகள்:
- நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள்: அதிகபட்ச வயது வரம்பு இல்லை
- முன்னாள் இராணுவத்தினர்: அதிகபட்ச வயது வரம்பு இல்லை
- ஆதரவற்ற விதவை: அதிகபட்ச வயது வரம்பு இல்லை
TN Cooperative Bank Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்குரிய உதவியாளர் (Assistant) பதவிக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| பணியின் விவரம் (Post Name) | சம்பளம் (மாதம்) (Salary per Month) |
| உதவியாளர் (Assistant) | மாதம் Rs.32,020 முதல் Rs.96,210 வரை |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
TN Cooperative Bank Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் பின்வரும் இரண்டு நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- எழுத்துத் தேர்வு (Written Examination): விண்ணப்பதாரர்கள் முதலில் ஒரு போட்டித் தேர்வுக்குத் (Competitive Exam) தயாராகி அதில் தேர்ச்சி பெற வேண்டும்.
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification): எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், அவர்கள் சமர்ப்பித்த கல்வித் தகுதிகள், வயது, சாதி மற்றும் இதர ஆவணங்களை நேரில் சரிபார்க்க வேண்டும்.
முக்கிய குறிப்பு: மேலே குறிப்பிட்ட இரண்டு நிலைகளிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே விண்ணப்பதாரர்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விரிவான பாடத்திட்டம் (Syllabus) மற்றும் செயல்முறை விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை (Official Notification) பார்க்கவும்
TN Cooperative Bank Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான கட்டண விவரங்கள், வகுப்பு வாரியாகப் பிரிக்கப்பட்டு உள்ளன:
1. சலுகை கட்டணம் – ரூ. 250/-
இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டிய பிரிவுகள்:
- SC (பட்டியல் சாதிகள்)
- SC(A) (அருந்ததியர் உட்பட பட்டியல் சாதிகள்)
- ST (பழங்குடியினர்)
- DW / Destitute Widows (ஆதரவற்ற விதவைகள்)
- PwBD / PwD (மாற்றுத் திறனாளிகள்)
2. பொது மற்றும் இதர பிரிவினர் கட்டணம் – ரூ. 500/-
இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டிய பிரிவுகள்:
- பொதுப் பிரிவினர் (General Category)
- BC (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)
- BCM (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்))
- MBC/DC (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர்)
குறிப்பு:
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கி சலான் மூலமாகவோ செலுத்தலாம்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பின்னரே உங்கள் விண்ணப்பம் முழுமையடையும்.
- மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
Tamilnadu Cooperative Bank Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.12.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2025
TN Cooperative Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் (https://tncoopsrb.in/) என்ற இணையதளத்தில் சென்று 14.12.2025 முதல் 31.12.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு, கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- மேலும் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
குறிப்பு: விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கு முன் அனைத்து வழிமுறைகளையும் கவனமாகப் படிக்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் (14.12.2025 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும்) | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |








