TMB Bank Recruitment 2025: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானது (TMB), Probationary Officer பதவிகளுக்கான பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 20.08.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பற்றி:
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited) தூத்துக்குடி, தமிழ்நாடு, இந்தியா தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். இந்த வங்கி தற்போது இந்தியா முழுவதும் 509 முழு கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்க கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை கொண்டுள்ளது.
.
TMB Bank Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | வங்கி வேலைகள் 2025 |
துறைகள் | தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி Tamilnad Mercantile Bank |
பணிகள் | Probationary Officer |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 20.08.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | http://www.tmbnet.in/tmb_careers/ |
Tamilnad Mercantile Bank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- பதவியின் பெயர்: Probationary Officer
- காலியிடங்கள்: பல்வேறு காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamilnad Mercantile Bank Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் Probationary Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு பட்டப்படிப்பையும் (Any Degree) முடித்திருக்க வேண்டும்.
Tamilnad Mercantile Bank Job 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் Probationary Officer பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும். வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வுகள் இருக்கலாம்.
Tamilnad Mercantile Bank Job 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2025 Probationary Officer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.8,64,000 சம்பளமாக வழங்கப்படும் (மாதம் ரூ.72,000 சம்பளம்).
Tamilnad Mercantile Bank Job 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் Probationary Officer பணிக்கு, விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் நேர்காணல் (Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025
TMB Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எந்தவிதமான கட்டணமும் இல்லை. ஆன்லைன் வழியாக இலவசமாக விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் சரியான இமெயில் மற்றும் செல்போன் எண்களை வழங்க வேண்டும். 12.08.2025 முதல் 020.08.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |