தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் மாவட்ட வருவாய் துறையில் கிராம உதவியாளர் வேலை – 32 காலியிடங்கள்…10வது போதும் || ரூ. 35100 சம்பளம்! Tirupattur Village Assistant Recruitment 2025

Tirupattur Village Assistant Recruitment 2025: தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 32 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்திருப்பத்தூர் வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மைத் துறை
காலியிடங்கள்32
பணிகள்கிராம உதவியாளர்
பணியிடம்திருப்பத்தூர் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி22.08.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://Tirupathur.nic.in/

தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் வருவாய் துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருப்பத்தூர் வருவாய் துறையில் கிராம உதவியாளர் (Village Assistant) பணிக்கு மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் உள்ளன.

தாலுகா வாரியான காலிப்பணியிடங்கள்:

  • ஆம்பூர் தாலுகா – 17 பதவிகள்
  • வாணியம்பாடி தாலுக்கா – 08 பதவிகள்
  • ஆம்பூர் தாலுகா – 01 பதவி
  • நாட்றம்பள்ளி தாலுகா – 06 பதவிகள்

இந்த கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:

  • தமிழில் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
  • காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்: 21 வயது நிரம்பியவராகவும், 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள்: 21 வயது நிரம்பியவராகவும், 42 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
  • இதர வகுப்பினர்: 21 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

திருப்பத்தூர் வருவாய் துறை ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பின்படி, கிராம உதவியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை வழங்கப்படும்.

திருப்பத்தூர் கிராம உதவியாளர் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • மிதிவண்டி /இருசக்கர வாகனம் ஓட்டும் திறன்: இது ஒரு தகுதித் தேர்வாக இருக்கும்.
  • வாசித்தல் மற்றும் எழுதும் திறன்: தமிழ் மொழியில் வாசித்தல் மற்றும் எழுதும் திறமை சோதிக்கப்படும்.
  • நேர்முகத் தேர்வு: விண்ணப்பதாரர்களின் பொது அறிவு மற்றும் பதவிக்குரிய பொருத்தப்பாடு மதிப்பீடு செய்யப்படும்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு: சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து அசல் ஆவணங்களும் சரிபார்க்கப்படும்.
  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.07.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2025

தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் வருவாய் துறையில் 2025 ஆம் ஆண்டுக்கான கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://Tirupathur.nic.in/ என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். (அல்லது, தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பு மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்).

விண்ணப்பப் படிவத்தினை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் 22.08.2025 தேதி மாலை 5.45 மணி வரை நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்பப் படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment