Tirunelveli Sathunavu Amaipalar Recruitment 2026

10வது தேர்ச்சி…தமிழ்நாடு அரசு சத்துணவு துறையில் சமையல் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Tirunelveli Sathunavu Amaipalar Recruitment 2026

Tirunelveli Sathunavu Amaipalar Recruitment 2026: தமிழ்நாடு அரசின் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டப் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 15 சமையல் உதவியாளர் (Cook Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
துறைகள்தமிழ்நாடு அரசு சத்துணவு துறை
காலியிடங்கள்15
பணிகள்சமையல் உதவியாளர் (Cook Assistant)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி14.01.2026
பணியிடம்திருநெல்வேலி மாவட்டம்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tirunelveli.nic.in/

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
சமையல் உதவியாளர் (Cook Assistant)15

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சத்துணவு துறை சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

  • அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியில் சரளமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வகை (Category)வயது வரம்பு விவரங்கள்
பொதுப்பிரிவினர் (OC) & பிற்படுத்தப்பட்டோர்21 வயது முதல் 40 வயது வரை
பழங்குடியினர் (ST)18 வயது முதல் 40 வயது வரை
விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர்20 வயது முதல் 40 வயது வரை

வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியின் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய விவரம்:

பணி நிலைதொகை (ரூபாய்)
ஆரம்ப ஊதியம்ரூ. 3,000/-
ஓராண்டு பணிக்கு பின்ரூ. 3,000 – 9,000/-

முக்கிய குறிப்பு: இப்பணிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .

விண்ணப்பதாரர் வசிக்கின்ற இடத்திற்கும், அவர் வேலை கோரும் சத்துணவு மையத்திற்கும் இடைப்பட்ட தூரம் 3 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி, வருவாய் கிராமம் போன்றவை கணக்கில் கொள்ளப்படாது, தூரம் மட்டுமே முக்கியம்).

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.12.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.01.2026

தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்ட சத்துணவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தைப் பெறுவது எப்படி?

  1. இணையதளம்: விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தை திருவள்ளூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirunelveli.nic.in/ என்ற முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் (Link) மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

  • பூர்த்தி செய்தல்: பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை எவ்விதத் தவறும் இன்றி முழுமையாகப் பூர்த்தி செய்யவும்.
  • ஆவணங்களை இணைத்தல்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் (Self-Attested) இணைக்க வேண்டும்.
  • சமர்ப்பித்தல்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (Panchayat Union Office) அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் நேரடியாகச் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றிதழ்களின் பட்டியல்

விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களின் நகல்களைத் தவறாமல் இணைக்கவும்:

  • பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC)
  • 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (SSLC Marksheet)
  • குடும்ப அட்டை (Ration Card)
  • இருப்பிடச் சான்று (Domicile Certificate)
  • ஆதார் அட்டை (Aadhaar Card)
  • சாதிச் சான்றிதழ் (Community Certificate)
  • சிறப்புச் சான்றுகள் (தேவைப்பட்டால் மட்டும்): விதவை / கணவரால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (Official Notification) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் (கல்வித் தகுதி, வயது வரம்பு போன்றவை) உங்களிடம் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top