Thoothukudi DHS Recruitment 2026: தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 23 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் MPHW (Male) Health Inspector Gr-II, Technical co-ordinator IT(HMIS), Multipurpose Health Provider, Multipurpose Worker (NAM), Multipurpose Hospital Worker, Audiologist and Speech Therapist, Radiographer, Account Assistant, Van Cleaner, Security Guard மற்றும் Occupational Therapist உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள், அந்தந்தப் பணிக்குத் தேவையான கல்வித் தகுதியை (8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை) பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து, வரும் 12.02.2026-ஆம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Thoothukudi DHS Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | மாவட்ட சுகாதார சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் District Health Society – Thoothukudi District |
| காலியிடங்கள் | 23 |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 12.02.2026 |
| பணியிடம் | தூத்துக்குடி – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://thoothukudi.nic.in/ |
Thoothukudi DHS Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பணியின் பெயர் (Post Name) | காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
| MPHW (Male) Health Inspector Gr-II | 10 |
| Multipurpose Hospital Worker | 03 |
| Multipurpose Health Provider | 02 |
| Technical co-ordinator IT (HMIS) | 01 |
| Multipurpose Worker (NAM) | 01 |
| Audiologist and Speech Therapist | 01 |
| Radiographer | 01 |
| Account Assistant | 01 |
| Occupational Therapist | 01 |
| Security Guard | 01 |
| Van Cleaner | 01 |
| மொத்த பணியிடங்கள் | 23 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Thoothukudi DHS Recruitment 2026 கல்வித் தகுதி
| பணியின் பெயர் | கல்வித் தகுதி (Educational Qualification) |
| MPHW (Male) Health Inspector Gr-II | 1. +2 தேர்ச்சியுடன் உயிரியல் (Biology) அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் படித்திருக்க வேண்டும். 2. 10-ஆம் வகுப்பில் தமிழ் ஒரு பாடமாக இருந்திருக்க வேண்டும். 3. இரண்டு ஆண்டுகால Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector பயிற்சி முடித்திருக்க வேண்டும். |
| Technical co-ordinator IT(HMIS) | 1. Diploma (ECE/IT/CS) அல்லது B.Sc (CS) / BCA முடித்திருக்க வேண்டும். 2. Network Certification மற்றும் 1-2 ஆண்டு அனுபவம் அவசியம். 3. Linux (SUSE LINUX) மற்றும் IP configuration பற்றிய அறிவு தேவை. |
| Multipurpose Health Provider | 1. DGNM (செவிலியர் படிப்பு) அல்லது B.Sc. Nursing முடித்திருக்க வேண்டும். 2. தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
| Audiologist and Speech Therapist | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree in speech and Language pathology முடித்திருக்க வேண்டும். |
| Radiographer | Diploma in Radio diagnosis Technology (2 ஆண்டுகள்) அல்லது Certificate of Radiology Assistant முடித்திருக்க வேண்டும். |
| Account Assistant | 1. B.Com / B.A Corporate / BCS முடித்திருக்க வேண்டும். 2. கணக்கு பராமரிப்பில் அனுபவம் மற்றும் “Tally” மென்பொருள் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். |
| Occupational Therapist | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelors அல்லது Master’s degree in Occupational Therapy முடித்திருக்க வேண்டும். |
| Multipurpose Worker (NAM) / Hospital Worker / Security Guard / Van Cleaner | தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். |
TN DHS Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
| பணியின் பெயர் | வயது வரம்பு (12.02.2026 அன்று) |
| MPHW (Male) Health Inspector Gr-II | அதிகபட்சம் 50 வயது |
| Audiologist and Speech Therapist | SC/ST: 37, BC/MBC: 34, OC: 32 |
| Occupational Therapist | அதிகபட்சம் 40 வயது |
| Technical co-ordinator IT (HMIS) | SC/ST: 37, BC/MBC: 34, OC: 32 |
| Multipurpose Health Provider | அதிகபட்சம் 50 வயது |
| Account Assistant | அதிகபட்சம் 35 வயது |
| Radiographer | SC/ST: 37, BC/MBC: 34, OC: 32 |
| Multipurpose Worker (NAM) | 18 முதல் 40 வயது வரை |
| Multipurpose Hospital Worker | 18 முதல் 40 வயது வரை |
| Security Guard | 18 முதல் 40 வயது வரை |
| Van Cleaner | 18 முதல் 40 வயது வரை |
சம்பள விவரங்கள்
| பணியின் பெயர் | மாத ஊதியம் |
| MPHW (Male) Health Inspector Gr-II | ₹ 14,000 |
| Audiologist and Speech Therapist | ₹ 23,000 |
| Occupational Therapist | ₹ 23,000 |
| Technical co-ordinator IT (HMIS) | ₹ 21,000 |
| Multipurpose Health Provider | ₹ 18,000 |
| Account Assistant | ₹ 16,000 |
| Radiographer | ₹ 13,000 |
| Multipurpose Worker (NAM) | ₹ 10,000 |
| Multipurpose Hospital Worker | ₹ 8,500 |
| Security Guard | ₹ 8,500 |
| Van Cleaner | ₹ 8,500 |
சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
Thoothukudi DHS Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தினை தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில் (https://thoothukudi.nic.in/) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கீழே குறிப்பிட்டுள்ள அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்
விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள இணைக்கப்பட வேண்டிய கல்வித்தகுதி மற்றும் இதர சான்றுகளின் நகல்கள் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து 12.02.2026 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி – 628002.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |









