Tamilnadu Sathunavu Thurai Recruitment 2025

10 ஆம் வகுப்பு போதும் தமிழ்நாடு அரசு சத்துணவு மையத்தில் சமையல் உதவியாளர் வேலை – தேர்வு கிடையாது! Tamilnadu Sathunavu Thurai Recruitment 2025

Tamilnadu Sathunavu Thurai Recruitment 2025: தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 04 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டம்
தமிழ்நாடு அரசு சத்துணவு துறை
காலியிடங்கள்04
பணிகள்சமையல் உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி25.11.2025 மாலை 5.45 மணி வரை
பணியிடம்திருப்பத்தூர் மாவட்டம்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tirupathur.nic.in/

தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி பெயர்காலியிடங்கள்
சமையல் உதவியாளர்04

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் மாவட்ட சத்துணவு துறை சமையல் உதவியாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி பெற்றிருக்க வேண்டும். தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.

  • பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (OC) ஆகியோர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்து 40 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • பழங்குடியினருக்கு 18 வயது பூர்த்தி அடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியின் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணிநியமனம் செய்யப்படுபவர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.3,000/- வழங்கப்படும். இப்பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியம் (ஊதிய நிலை-1 (Level of Pay – ரூ.3000-9000) ஊதியம் வழங்கப்படும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .

விண்ணப்பதாரர்கள் வேலை கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி – குறுவட்டம் – வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை)

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.11.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025

தமிழ்நாடு அரசு திருப்பத்தூர் மாவட்ட சத்துணவு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை https://tirupathur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  1. பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யவும்.
  2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தேவையான ஆவணங்களின் நகல்களையும் இணைக்கவும்.
  3. விண்ணப்பத்தை, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்களின் நகல்கள்:

விண்ணப்பிக்கும்போது, கீழ்க்கண்ட ஆவணங்களின் நகல்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைப்பது அவசியம்:

  • பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC)
  • SSLC மதிப்பெண் சான்றிதழ் (10-ம் வகுப்பு)
  • குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)
  • இருப்பிட சான்று (Domicile Certificate)
  • ஆதார் அட்டை
  • சாதி சான்று (Community Certificate)
  • விதவை / கணவரால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்றிதழ் (தேவைப்பட்டால்)
  • மாற்றுத்திறனாளி அடையாள அட்டை (தேவைப்பட்டால்)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (Official Notification) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் (கல்வித் தகுதி, வயது வரம்பு போன்றவை) உங்களிடம் இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top