SSC CHSL Recruitment 2025: ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் எனப்படும் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது காலியாக உள்ள 3131 Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO), Data Entry Operator Grade ‘A’ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 18.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
SSC CHSL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | பணியாளர் தேர்வு ஆணையம் Staff Selection Commission SSC Combined Higher Secondary Level (CHSL) |
காலியிடங்கள் | 3131 |
பணிகள் | Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO), Data Entry Operator Grade ‘A’ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 18.07.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ssc.gov.in/ |
SSC CHSL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் SSC CHSL ஆட்சேர்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA) | 3131 Posts (Combined) |
Data Entry Operator (DEO) | |
Data Entry Operator Grade ‘A’ |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SSC CHSL Recruitment 2025 கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA) | அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Data Entry Operator (DEO) | அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியல் பிரிவில் கணிதத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Data Entry Operator Grade ‘A’ | அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியல் பிரிவில் கணிதத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
SSC Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2026 நிலவரப்படி, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (02.01.1999 மற்றும் 01.01.2008 க்கு இடையில் பிறந்தவர்கள்)
வயது தளர்வு:
- SC/ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PwBD (பொது/EWS): 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
- PwBD (OBC): 13 ஆண்டுகள்
SSC CHSL Recruitment 2025 சம்பள விவரங்கள்
SSC CHSL ஆட்சேர்ப்பு 2025 – சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பள வரம்பு (மாதம்) |
---|---|
Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) | ரூ. 19,900 – 63,200/- |
Data Entry Operator (DEO) | ரூ. 29,200 – 92,300/- |
Data Entry Operator Grade ‘A’ | ரூ. 25,500 – 81,100/- |
SSC Recruitment 2025 தேர்வு செயல்முறை
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் SSC CHSL வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Tier-I (Computer Based Examination) (கணினி சார்ந்த தேர்வு)
- Tier-II (Computer Based Examination) (கணினி சார்ந்த தேர்வு)
- Document Verification (ஆவண சரிபார்ப்பு)
விண்ணப்ப கட்டணம்:
- Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
- Others – Rs.100/-
முக்கிய தேதிகள்
- ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 23.06.2025
- ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 18.07.2025
- முதல்நிலைத் தேர்வு (Tier-I): 08.09.2025 முதல் 18.09.2025 வரை
- இரண்டாம்நிலைத் தேர்வு (Tier-II): பிப்ரவரி–மார்ச் 2026
SSC CHSL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் SSC CHSL வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 23.06.2025 முதல் 18.07.2025 தேதிக்குள் https://ssc.gov.in/ இணையதளத்தில் சென்று “Apply” பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |