Wednesday, September 24, 2025
Home10th Pass Govt Jobsதேர்வு எழுதாமல் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் நூலகர் வேலை! ரூ.24,200/- வரை...

தேர்வு எழுதாமல் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையில் நூலகர் வேலை! ரூ.24,200/- வரை சம்பளம் Sivagangai DIPR Recruitment 2024

Sivagangai DIPR Recruitment 2024: தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை தற்போது காலியாகவுள்ள 07 நூலகர் – பராமரிப்பாளர் (Librarian – Caretaker) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் குன்றக்குடியில் அமைந்துள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளார் மணி மண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கு, கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகின்ற 13.12.2024 அன்று மாலை 05.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்செய்தி மக்கள் தொடர்புத்துறை
சிவகங்கை மாவட்டம்
Information and Public Relations Office
காலியிடங்கள்01
பணிநூலகர் – பராமரிப்பாளர்/
(Librarian – Caretaker)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி13.12.2024 
பணியிடம்சிவகங்கை,தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://sivaganga.nic.in/
Join WhatsApp ChannelJoin Now
Join Telegram ChannelJoin Now
WhatsApp Channel Follow
Telegram Channel Join

சிவகங்கை மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • நூலகர் – பராமரிப்பாளர் (Librarian – Caretaker) – 01 காலியிடம்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இதையும் படிக்கவும்: மத்திய அரசு வேலை: என்டிபிசி நிறுவனத்தில் 50 உதவி அலுவலர் காலிப்பணியிடங்கள்; ரூ.30,000 டூ ரூ.1,20,000 வரை சம்பளம் || உடனே அப்ளை பண்ணுங்க

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் நூலகர் மற்றும் தகவல் அறிவியல் படிப்பில் (Certificate in Library and Information Science) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

இதையும் படிக்கவும்: தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும்

01.07.2024 அன்றுள்ளவாறு 18 முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். (அரசு நிர்ணயித்துள்ள வயது தளர்வுகள் பொருந்தும்)

வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

பதவியின் பெயர்சம்பளம்
நூலகர் – பராமரிப்பாளர்/
(Librarian – Caretaker)
ரூ.7,700 – ரூ.24,200

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிக்கவும்: தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் தேர்வு எழுதாமல் வேலை; இப்போதே விண்ணப்பிக்கவும்!

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சிவகங்கை மாவட்ட தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.11.2024 முதல் 13.12.2024 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்,
தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்,
சிவகங்கை-630562.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments