NIE Chennai Recruitment 2025: சென்னையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) கீழ் இயங்கும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) காலியாகவுள்ள 10 உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ் பிரிவு எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி?, வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NIE Chennai Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ICMR-National Institute of Epidemiology |
காலியிடங்கள் | 10 |
பணி | உதவியாளர், மேல் பிரிவு எழுத்தர், கீழ் பிரிவு எழுத்தர் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 14.08.2025 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nie.gov.in/pages/careers |
NIE Chennai Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பதவி விவரங்கள் | காலியிடங்கள் |
Assistant (உதவியாளர்) | 01 காலியிடம் |
Upper Division Clerk (மேல்நிலை எழுத்தர்) | 02 காலியிடங்கள் |
Lower Division Clerk (கீழ்நிலை எழுத்தர்) | 07 காலியிடங்கள் |
குறிப்பு: மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NIE Chennai Recruitment 2025 கல்வித் தகுதி
Assistant (உதவியாளர்):
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து குறைந்தது 3 ஆண்டுகள் இளங்கலை பட்டம் (Any Degree).
- கணினியில் பணிபுரியும் அறிவு (MS Office/Power Point).
Upper Division Clerk (மேல்நிலை எழுத்தர்):
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Any Degree தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி.
- கணினியில் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் ஒரு நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம் (சராசரியாக ஒரு வார்த்தைக்கு ஐந்து எழுத்துக்கள் வீதம், ஆங்கிலத்தில் 35 WPM என்பது 10500 KDPH அல்லது இந்தியில் 30 WPM என்பது 9000 KDPH ஆகும்).
Lower Division Clerk (கீழ்நிலை எழுத்தர்):
- 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி.
- கணினியில் ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் ஒரு நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் வேகம் (சராசரியாக ஒரு வார்த்தைக்கு ஐந்து எழுத்துக்கள் வீதம், ஆங்கிலத்தில் 35 WPM என்பது 10500 KDPH அல்லது இந்தியில் 30 WPM என்பது 9000 KDPH ஆகும்).
NIE Chennai Recruitment 2025 சம்பள விவரங்கள்
பதவி விவரங்கள் | சம்பளம் |
Assistant (உதவியாளர்) | Rs.35,400 – Rs.1,12,400/- |
Upper Division Clerk (மேல்நிலை எழுத்தர்) | Rs.25,500 – Rs.81,100/- |
Lower Division Clerk (கீழ்நிலை எழுத்தர்) | Rs.19,900 – Rs.63,200/- |
NIE Chennai Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
வயது வரம்பு: (14.08.2025 அன்றுள்ளபடி)
- Assistant: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Upper Division Clerk (UDC): 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Lower Division Clerk (LDC): 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பு தளர்வு:
- SC/ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
- PwBD (பொது/EWS) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவத்தினர்: அரசு கொள்கையின்படி
தேர்வு செயல்முறை
ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Tier -1: கணினி அடிப்படையிலான தேர்வு (MCQs) மற்றும் Tier-2: கணினி திறன் தேர்வு (Computer Proficiency Test). மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- பெண்கள்/SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/PWD விண்ணப்பதாரர்கள்: Rs.1600/-
- மற்ற விண்ணப்பதாரர்கள்: Rs.2000/-
கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் மூலம்.
NIE Chennai Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.08.2025
NIE Chennai Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ICMR தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 25.07.2025 முதல் 14.08.2025 தேதிக்குள் https://nie.gov.in/pages/careers இணையதளத்தில் சென்று New User பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |