NIA Recruitment 2024: மத்திய அரசின் உள்துறை கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமையில் காலியாகவுள்ள 164 இன்ஸ்பெக்டர், சப் – இன்ஸ்பெக்டர், உதவி சப் – இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டமிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | தேசிய புலனாய்வு முகமை National Investigation Agency |
காலியிடங்கள் | 164 |
பணி | இன்ஸ்பெக்டர் சப் – இன்ஸ்பெக்டர் உதவி சப் – இன்ஸ்பெக்டர் தலைமை கான்ஸ்டமிள் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 25.12.2024 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nia.gov.in/ |
NIA Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தேசிய புலனாய்வு துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
இன்ஸ்பெக்டர் | 55 |
சப் – இன்ஸ்பெக்டர் | 64 |
உதவி சப் – இன்ஸ்பெக்டர் | 40 |
தலைமை கான்ஸ்டமிள் | 5 |
மொத்தம் | 164 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NIA Recruitment 2024 கல்வித் தகுதி
தேசிய புலனாய்வு துறை வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தேசிய புலனாய்வு முகமை பணிகளுக்கான தகுதிகள்:
- இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தலைமை கான்ஸ்டபிள்: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அனுபவம்: மத்திய அரசு அல்லது மாநில அரசு துறைகளில் குறைந்தது 2 முதல் 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
NIA Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
தேசிய புலனாய்வு முகமை 2024 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு 56 ஆண்டுகள் ஆகும். அதாவது, விண்ணப்பிக்கும் தேதியன்று உங்களது வயது 56 ஐத் தாண்டியிருக்கக் கூடாது.
NIA Recruitment 2024 சம்பள விவரங்கள்
- இன்ஸ்பெக்டர் பதவிக்கு ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
- சப் – இன்ஸ்பெக்டர் பதவிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
- உதவி சப் – இன்ஸ்பெக்டர் பதவிக்கு ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை சம்பளம் வழங்கப்படும்.
- தலைமை கான்ஸ்டமிள் பதவிக்கு ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
NIA Recruitment 2024 தேர்வு செயல்முறை
இப்பணியிடங்கள் பிரதிநிதித்துவம் அடிப்படையில் நிரப்பப்படுவதால், தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
NIA Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மத்திய/மாநில அரசு ஊழியர்கள், https://nia.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
“SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi – 110003”
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- ரயில்வே துறையில் 6238 காலியிடங்கள்… மாதம் ரூ.19,900 சம்பளம்.. தமிழ்நாட்டில் பணி! RRB Technician Recruitment 2025
- தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையில் வேலை – ரூ.28,500 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Environment Department Recruitment 2025
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் நூலக உதவியாளர் வேலை – ரூ. 47,600 சம்பளம்! Supreme Court of India Recruitment 2025
- ரூ. 56100 சம்பளம்! Indian Army வேலைவாய்ப்பு 2025 – 381 காலியிடங்கள்! Indian Army Recruitment 2025
- 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு புலனாய்வு துறையில் வேலை; 4,987 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு IB Security Assistant Recruitment 2025