NCL Recruitment 2026

10-வது, டிப்ளமோ முடித்தவர்களுக்கு நிலக்கரி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – 577 காலியிடங்கள் மாதம் ₹47,000 வரை ஊதியம் || முழு விவரம் இதோ! NCL Recruitment 2026

NCL Recruitment 2026: மத்திய அரசின் வடக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Northern Coalfields Limited – NCL), 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் HEMM Operator (Trainee), Paramedical Staff மற்றும் Overseer (Civil) ஆகிய பதவிகளில் மொத்தம் 577 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல், சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ, நர்சிங் மற்றும் மருத்துவத் துறை சார்ந்த படிப்பு முடித்தவர்கள் வரை இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, பதவியைப் பொறுத்து நாள் ஒன்றுக்கு ₹1,502.66 அல்லது மாத ஊதியமாக ₹43,775 முதல் ₹47,330 வரை வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் மே மாதம் 1-ஆம் தேதிக்குள் (01.05.2026) இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்
(Northern Coalfields Limited – NCL)
காலியிடங்கள்577
பணிகள்HEMM Operator (Trainee), Paramedical Staff மற்றும் Overseer (Civil)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி01.05.2026
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nclcil.in/

மத்திய அரசு NCL நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி (Post)காலியிடங்கள்
HEMM Operator (Trainee)472
Paramedical Staff75
Overseer (Civil)30

HEMM Operator – காலியிடங்கள் விவரம்

  • Dumper: 308 | Dozer: 52 | Surface Miner: 43
  • Grader: 34 | Pay Loader: 18 | Crane: 17

Paramedical Staff – காலியிடங்கள் விவரம்

  • Staff Nurse: 47 | Pharmacist: 04 | Physiotherapist: 04
  • Technician (Pathology): 12 | Technician (Radiographer): 03
  • Technician (Dental): 02 | Technician (Optometry): 01 | Jr. Technician (ECG): 02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசு Northern Coalfields Limited வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பதவி (Post)கல்வித் தகுதி
HEMM Operator (Trainee)10-ம் வகுப்பு + HMV/ Transport License
Paramedical Staffபதவிகளுக்கு ஏற்ப Nursing/ B.Pharm/ Diploma/ ECG சான்றிதழ்
Overseer (Civil)10-ம் வகுப்பு + Diploma in Civil Engg. (3 Years)

மத்திய அரசு NCL நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

  • எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
  • ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு NCL நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

பதவி (Post)சம்பளம்
HEMM Operator (Trainee)நாள் ஒன்றுக்கு ₹1502.66/-
Paramedical Staffமாதம் ₹43,775 – 47,330/-
Overseer (Civil)மாதம் ₹47,330/-

மத்திய அரசு NCL நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 – ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு (CBT) மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.1,180/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
நிகழ்வுதேதி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி09.04.2026 (10:00 AM)
விண்ணப்பிக்க கடைசி தேதி01.05.2026 (11:59 PM)

மத்திய அரசு NCL நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.04.2026 முதல் 10.05.2026 தேதிக்குள் https://www.nclcil.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
அரசு வேலை WhatsApp Channel உடனே சேருங்கள்
இன்றைய அரசு வேலைClick Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top