Friday, August 15, 2025
Home10th Pass Govt Jobsஇந்திய கடற்ப்படையில் Tradesman வேலைவாய்ப்பு - 1266 காலியிடங்கள் || ரூ.19,900 சம்பளம்! Indian Navy...

இந்திய கடற்ப்படையில் Tradesman வேலைவாய்ப்பு – 1266 காலியிடங்கள் || ரூ.19,900 சம்பளம்! Indian Navy Tradesman Recruitment 2025

Indian Navy Tradesman Recruitment 2025: இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள 1266 டிரேட்ஸ்மேன் (ஸ்கில்டு) குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்இந்தியக் கடற்படை
Indian Navy
காலியிடங்கள்1266
பணிகள்Tradesman (Skilled) Group C
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி02.09.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.joinindiannavy.gov.in/

இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • பதவியின் பெயர்: டிரேட்ஸ்மேன் (ஸ்கில்டு)
  • மொத்த பணியிடங்கள்: 1266
  • பணி வகை: குரூப் சி (தொழில்துறை)
Trade Nameகாலியிடங்கள்
Auxiliary Trades49
Civil Works Trade17
Electrical Trade172
Electronics & Gyro Trade50
Foundry Trade9
Heat Engine Trade121
Instrument Trade9
Machine Trade56
Mechanical Trade144
Mechanical Systems79
Mechatronics23
Metal Trade217
Millwright Trade28
Ref & AC Trade17
Ship Building Trade226
Weapon Electronics Trade49
மொத்தம்1266

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்தியக் கடற்படை பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து பத்தாம் வகுப்பு (10th pass) அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கில மொழியில் அறிவு இருக்க வேண்டும். அதனுடன், பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்:

  • சம்பந்தப்பட்ட டிரேடில் அப்ரண்டிஸ் பயிற்சி (Apprenticeship Training) முடித்திருக்க வேண்டும்.
  • அல்லது, இந்திய இராணுவம், கடற்படை அல்லது விமானப்படையில் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பிரிவில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் (regular service) பெற்றிருக்க வேண்டும்.

இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் (ஸ்கில்டு) ஆட்சேர்ப்பு 2025-க்கான வயது வரம்பு மற்றும் தளர்வு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • பதவியின் பெயர்: டிரேட்ஸ்மேன் (ஸ்கில்டு)
  • வயது வரம்பு (02.09.2025 நிலவரப்படி): 18 முதல் 25 வயது வரை.

வயது தளர்வு

  • SC/ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • முன்னாள் இராணுவ வீரர்கள் (Ex-Servicemen): அரசாங்க கொள்கையின்படி தளர்வுகள் உண்டு.

இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் வேலைவாய்ப்பு 2025-க்கான சம்பளம் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பதவிசம்பள விகிதம்
Tradesman (Skilled)Rs. 19,900 – 63,200/- Per Month (Level 2)

இந்தியக் கடற்படை பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Exam) மற்றும் டிரேட்/திறன் தேர்வு (Trade/Skill Test) ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்திய கடற்படை டிரேட்ஸ்மேன் (ஸ்கில்டு) ஆட்சேர்ப்பு 2025-க்கான தேர்வு செயல்முறை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எழுத்துத் தேர்வு (Written Exam)

  • இது ஒரு கணினி அடிப்படையிலான தேர்வாகும் (Computer-Based Test – CBT).
  • தேர்வானது பொது அறிவு, பகுத்தறிவு, எண் திறன், பொது ஆங்கிலம் மற்றும் டிரேடு தொடர்பான அறிவு ஆகியவற்றை மதிப்பிடும்.
  • மொத்த கேள்விகள்: 150
  • மொத்த மதிப்பெண்கள்: 150
  • தேர்வு கால அளவு: 2 மணிநேரம்
  • மொழி: இந்தி மற்றும் ஆங்கிலம் (இரு மொழிகளிலும் கேள்விகள் இருக்கும்).
  • தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் (Negative Marking) இல்லை.

டிரேட்/திறன் தேர்வு (Trade/Skill Test)

  • எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் டிரேட்/திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
  • இது டிரேடு தொடர்பான திறன்களைப் மதிப்பீடு செய்யும் ஒரு தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவது அவசியம்.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 13.08.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 02.09.2025

இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 13.08.2025 முதல் 02.09.2025 தேதிக்குள் https://www.joinindiannavy.gov.in/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்திய கடற்படை பணிக்கு விண்ணப்பிக்க முதலில் Registration செய்ய வேண்டும். பின்பு Login செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்
Registration & Login Lnk
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments