Indian Bank Recruitment 2025: இந்தியன் வங்கி, காலியாகவுள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 07.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி?, வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Indian Bank Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்தியன் வங்கி |
காலியிடங்கள் | 1500 |
பணி | Apprentice |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 07.08.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.indianbank.in/career/ |
Indian Bank Apprentice Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:
- Apprentice – 1500 காலியிடங்கள்
பயிற்சியாளர் பயிற்சிக்கான மாநில வாரியான காலியிடங்கள்
மாநிலத்தின் பெயர் | காலியிடங்கள் |
ANDHRA PRADESH | 82 |
ARUNACHAL PRADESH | 1 |
ASSAM | 29 |
BIHAR | 76 |
CHANDIGARH | 2 |
CHHATTISGARH | 17 |
GOA | 2 |
GUJARAT | 35 |
HARYANA | 37 |
HIMACHAL PRADESH | 6 |
JAMMU & KASHMIR | 3 |
JHARKHAND | 42 |
KARNATAKA | 42 |
KERALA | 44 |
MADHYA PRADESH | 59 |
MAHARASHTRA | 68 |
MANIPUR | 2 |
MEGHALAYA | 1 |
NAGALAND | 2 |
NCT OF DELHI | 38 |
ODISHA | 50 |
PUDUCHERRY | 9 |
PUNJAB | 54 |
RAJASTHAN | 37 |
TAMIL NADU | 277 |
TELANGANA | 42 |
TRIPURA | 1 |
UTTAR PRADESH | 277 |
UTTARAKHAND | 13 |
WEST BENGAL | 152 |
மொத்தம் | 1500 |
குறிப்பு: மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indian Bank Apprentice Recruitment 2025 கல்வித் தகுதி
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கிகாரம் பெற்ற பிறகு கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01.04.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு பட்டப்படிப்பை (Any Degree) முடித்திருக்க வேண்டும் மற்றும் தேர்ச்சி சான்றிதழ்களைப் பெற்றிருக்க வேண்டும்.
Indian Bank Apprentice Recruitment 2025 சம்பள விவரங்கள்
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம், பெருநகர/நகர்ப்புற கிளைகளில் பணிபுரிவோருக்கு ₹15,000/-ம், கிராமப்புற/பகுதி நகர்ப்புற கிளைகளில் பணிபுரிவோருக்கு ₹12,000/-ம் வழங்கப்படும். சம்பளம் மற்றும் பிற சலுகைகள் குறித்த முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாகப் பார்க்கவும்.
Indian Bank Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு – 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு – 3 ஆண்டுகள்
- PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு – 13 ஆண்டுகள்
தேர்வு செயல்முறை
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு (Online Test) மற்றும் உள்ளூர் மொழித்திறன் தேர்வு (Local Language Proficiency Test – LLPT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்கள் – Rs.175/-
- மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.800/-
Indian Bank Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.08.2025
Indian Bank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18.07.2025 முதல் 07.08.2025 தேதிக்குள் www.indianbank.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
All eligible candidates need to register himself/herself on the apprenticeship portal (NATS 2.0 Portal) – www.nats.education.gov.in before applying for apprenticeship in the Bank. (Only for candidates who have passed their graduation examination on or after 1st April 2021).