Indbank Recruitment 2025: Indbank Merchant Banking Services Ltd. என்பது இந்தியன் வங்கியின் ஒரு துணை நிறுவனமாகும். இந்த வங்கியில் காலியாகவுள்ள 09 Secretarial Officer, Dealer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Indbank Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | வங்கி வேலை |
துறைகள் | Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD) |
காலியிடங்கள் | 09 |
பணி | Secretarial Officer, Dealer |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மற்றும் ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 26.07.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.indbankonline.com/ |
Indbank Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்தியன் வங்கியின் Indbank நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவி பெயர் | காலியிடங்கள் |
Secretarial Officer | 01 |
Dealer | 08 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Indbank Recruitment 2025 கல்வித் தகுதி
பதவி பெயர் | கல்வி தகுதி |
Secretarial Officer | Graduation |
Dealer | Graduation with NISM qualifications |
வயது வரம்பு விவரங்கள்
பதவி பெயர் | வயது வரம்பு |
Secretarial Officer | 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் (Must have completed 21 years and not exceed 35 years) |
Dealer | 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். |
சம்பள விவரங்கள்
பதவி பெயர் | சம்பளம் |
Secretarial Officer | ஊதியமாக வருடத்திற்கு Rs. 3.50 Lakhs (Rs. 3.50 Lakhs per annum) வழங்கப்படும் |
Dealer | ஊதியமாக வருடத்திற்கு Rs. 4.08 Lakhs (Rs. 4.08 Lakhs per annum) வழங்கப்படும் |
தேர்வு செயல்முறை
இந்தியன் வங்கியின் Indbank நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
Indbank Recruitment 2025 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.06.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.07.2025
Indbank Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்தியன் வங்கியின் Indbank நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் Indbank-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.indbankonline.com -இலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். படிவத்தைப் பூர்த்தி செய்தபின், தேவையான அனைத்து இணைப்புகளின் நகல்களுடன் சேர்த்து, கூரியர் அல்லது பதிவு அஞ்சல் மூலம் “Head Administration, No 480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam, Chennai-35” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாற்றாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இணைப்புகளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை recruitment@indbankonline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |