IMD Recruitment 2025

ஒரு டிகிரி இருந்தால் போதும் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் உதவியாளர் வேலை – 134 காலியிடங்கள் || சம்பளம்:ரூ.29,200! IMD Recruitment 2025

IMD Recruitment 2025: இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) 2025ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது காலியாகவுள்ள 134 Admin. Assistant, Project Scientist (I, II, III, E), மற்றும் Scientific Assistant போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இதுவாகும். எனவே, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் 14.12.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் யார் விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்India Meteorological Department (IMD)
இந்திய வானிலை ஆய்வு மையம்
காலியிடங்கள்134
பணிகள்Admin. Assistant, Project Scientist (I, II, III, E), Scientific Assistant
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி14.12.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.mha.gov.in/

இந்திய வானிலை ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவி (Post)காலியிடங்கள் (Vacancies)
Project Scientist (I, II, III, E)107
Scientific Assistant25
Admin. Assistant02

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

பதவி (Post)கல்வித் தகுதி (Educational Qualification)
Project Scientist (I, II, III, E)சம்பந்தப்பட்ட துறையில் M.Sc. (இயற்பியல்/ கணிதம்/ வானிலையியல்/ வளிமண்டல அறிவியல்/ மின்னணுவியல்/ கணினி அறிவியல்) அல்லது B.Tech. / B.E. (குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர் நிலை Project Scientist பதவிகளுக்கு அனுபவம் அவசியம்.
Scientific AssistantBachelor’s Degree in Science (Physics) / Computer Science / Computer Applications / Electronics / ECE / Instrumentation / IT / Telecommunication / Communication Engineering
Admin. Assistantஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு (Computer skills) அவசியம்.

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

பதவி (Post)அதிகபட்ச வயது வரம்பு (Max Age Limit)
Project Scientist (I, II, III, E)50 வயது
Scientific Assistant30 வயது
Admin. Assistant30 வயது

வயது வரம்பு தளர்வு விவரங்கள் (Age Relaxation Details)

விண்ணப்பதாரர்களுக்குப் பின்வரும் விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது:

  • SC/ ST: 5 ஆண்டுகள்
  • OBC: 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS): 10 ஆண்டுகள்
  • PwBD (OBC): 13 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST): 15 ஆண்டுகள்

இந்திய வானிலை ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் பின்வருமாறு:

பதவி (Post)சம்பளம் (Salary)
Project Scientist (I, II, III, E)Rs. 56,000 – 1,23,100/-
Scientific AssistantRs. 29,200/-
Admin. AssistantRs. 29,200/-

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், கீழ்க்கண்ட செயல்முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

  1. குறுகிய பட்டியல் தயாரித்தல் (Short Listing): விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்கள் ஆரம்பத்தில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
  2. நேர்காணல் (Interview): குறுகிய பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்காணலில் அவர்களின் அறிவு, திறன் மற்றும் பதவிக்கு அவர்கள் எவ்வளவு பொருத்தமானவர்கள் என்பது மதிப்பிடப்படும்.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.11.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2025

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தேவையான ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டும். அதன் பிறகு, 24.11.2025 முதல் 14.12.2025 தேதிக்குள், https://internal.imd.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, அங்கே உள்ள “Project Staff Registration Link” என்ற பட்டனைக் கிளிக் செய்து, ஆன்லைன் மூலம் உங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். கூடுதல் சந்தேகங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஆன்லைன் விண்ணப்ப படிவம்: Click Here (இந்த PDF Link ஐ கிளிக் செய்து கீழே கடைசிப் பக்கத்திற்குச் (Last Page) சென்றால், அங்கே “Registration Form Link” என்று ஆன்லைன் விண்ணப்பத்திற்கான நேரடி இணைப்பு (Link) கொடுக்கப்பட்டிருக்கும். அந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் விண்ணப்பப் படிவத்தை அணுகி, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top