Engine Factory Avadi Recruitment 2025: இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் சென்னை ஆவடியில் அமைந்துள்ள எஞ்சின் தொழிற்சாலையில் தற்போது காலியாக உள்ள 20 Junior Manager (இளநிலை மேலாளர்), Assistant Manager (உதவி மேலாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.10.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம், அதற்கான கல்வித் தகுதி என்ன, எப்படி விண்ணப்பிப்பது, வயது வரம்பு என்ன போன்ற அனைத்து விவரங்களையும் விரிவாகக் காண்போம்.
Engine Factory Avadi Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Engine Factory, Avadi ஆவடி எஞ்சின் தொழிற்சாலை |
காலியிடங்கள் | 20 |
பணிகள் | Junior Manager (இளநிலை மேலாளர்), Assistant Manager (உதவி மேலாளர்) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 31.10.2025 |
பணியிடம் | ஆவடி, சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ddpdoo.gov.in/career |
Engine Factory Avadi Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ஆவடி எஞ்சின் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Junior Manager (இளநிலை மேலாளர்) | 13 |
Assistant Manager (உதவி மேலாளர்) | 07 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Engine Factory Avadi Recruitment 2025 கல்வித் தகுதி
பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
Junior Manager (இளநிலை மேலாளர்) | டிப்ளமோ (Diploma), பி.இ / பி.டெக் (B.E/B.Tech), எல்.எல்.பி (LLB) |
Assistant Manager (உதவி மேலாளர்) | டிப்ளமோ (Diploma), எம்.பி.ஏ (MBA), பி.இ / பி.டெக் (B.E/B.Tech) |
Engine Factory Avadi Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
ஆவடி எஞ்சின் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிகபட்ச வயது வரம்பு தளர்வுகள்:
விண்ணப்பதாரர் வகை | வயது வரம்புத் தளர்வு |
SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் (5 years) |
OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் (3 years) |
PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் (10 years) |
HVF Junior Technician Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் (மாதம்) |
Junior Manager (இளநிலை மேலாளர்) | Rs.30,000/- |
Assistant Manager (உதவி மேலாளர்) | Rs.40,000/- |
Engine Factory Avadi Recruitment 2025 தேர்வு செயல்முறை
ஆவடி எஞ்சின் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியானவர்கள் தகுதிப் பட்டியல் (Merit List) மற்றும் நேர்காணல்/உரையாடல் (Interview/ Interaction) மூலம் ஆகிய நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
Engine Factory Avadi Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்
- பெண்கள்/ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.300/-
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2025
Engine Factory Avadi Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ஆவடி எஞ்சின் தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை, www.ddpdoo.gov.in அல்லது www.avnl.co.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அச்சிட்ட நகலை (Hard Copy), வயதுச் சான்று, கல்வித் தகுதி போன்றவற்றுக்கான ஆதாரங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட சுய சான்றொப்பம் (Self-attested) செய்யப்பட்ட நகல்களுடன் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் (தேவைப்பட்டால்) மற்றும் தேவையான ஆவணங்களுடன் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, சாதாரண அஞ்சல் (ORDINARY POST) மூலம் மட்டுமே கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Chief General Manager, Engine Factory, Avadi, Chennai – 600 054.
அஞ்சல் உறையின் (Envelope) மேல், நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைக் (Name of the Post applied for) கட்டாயம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |