Thursday, March 20, 2025
Home8th Pass Govt Jobsஎழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழ்நாட்டில் ECHS அலுவலகத்தில் வேலை; தேர்வு கிடையாது; ரூ.16,800 சம்பளம்!...

எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழ்நாட்டில் ECHS அலுவலகத்தில் வேலை; தேர்வு கிடையாது; ரூ.16,800 சம்பளம்! ECHS Thanjavur Recruitment 2025

ECHS Thanjavur Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) தலைமையகம் தஞ்சாவூர் கீழ் காலியாக உள்ள 06 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்/கிளார்க், பியூன், மருத்துவ அதிகாரி, மருந்தாளுனர் மற்றும் Safaiwala பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.03.2025 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Ex-Servicemen Contributory Health Scheme
முன்னாள் படைவீரர் பங்களிப்பு
சுகாதாரத் திட்டம் (ECHS)
காலியிடங்கள்06
பணிகள்டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்/கிளார்க்,
பியூன், மருத்துவ அதிகாரி, மருந்தாளுனர்
மற்றும் Safaiwala
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி15.03.2025
பணியிடம்தஞ்சாவூர், தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.echs.gov.in/

தஞ்சாவூர் ECHS அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்/கிளார்க்01
பியூன்01
மருத்துவ அதிகாரி02
மருந்தாளுனர்01
Safaiwala01
மொத்தம்06

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வி தகுதி
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்/கிளார்க்Any Degree தேர்ச்சி
பியூன்8th தேர்ச்சி
Safaiwalaஎழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
மருத்துவ அதிகாரிMBBS தேர்ச்சி
மருந்தாளுனர்B.Pharm or D.Pharm தேர்ச்சி
பணியின் பெயர்சம்பளம்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்/கிளார்க்மாதம் ரூ.22,500/-
பியூன்மாதம் ரூ.16,800/-
Safaiwalaமாதம் ரூ.16,800/-
மருத்துவ அதிகாரிமாதம் ரூ.75,000/-
மருந்தாளுனர்மாதம் ரூ.28,100/-

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தஞ்சாவூர் ECHS அலுவலகம் பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும். நேர்காணல் நடைபெறும் தேதி: 02.04.2025 நேர்காணல் காலை 09:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும்.

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தஞ்சாவூர் ECHS அலுவலகம் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை www.echs.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: SO ECHS (ECHS Cell) Air Force Station, Pudukkottai Road Thanjavur – 613005. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாள் 15.03.2025 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

நேர்காணல் தேதி, நேரம் மற்றும் இடம்: விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 2, 2025 அன்று காலை 10:00 மணிக்கு SO ECHS (ECHS செல்) விமானப்படை நிலையம், புதுக்கோட்டை சாலை தஞ்சாவூர் – 613005 முகவரிக்கு வர வேண்டும். காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை நேர்காணல் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு/மெட்ரிகுலேஷன், 10+2 மற்றும் பட்டப்படிப்பு/முதுகலை/டிப்ளமோ/பாடநெறி, பணி அனுபவம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள்/மதிப்பெண் தாள்கள்/பட்டங்களை நேர்காணலின் போது கொண்டு வர வேண்டும். தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

கூடுதல் விவரங்களுக்கு, 04362-228209. Mobile No 8696919187 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.03.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2025
  • நேர்காணல் நடைபெறும் தேதி: 02.04.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments