Department of Land Survey and Records Recruitment 2026: தமிழ்நாடு அரசு, அரியலூர் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள 01 பதிவுரு எழுத்தர் (Record Clerk) பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.02.2026 முதல் 09.03.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Department of Land Survey and Records Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | நில அளவை பதிவேடுகள் துறை Tamilnadu Land Survey Records Department |
| காலியிடம் | 01 |
| வேலை பெயர் | பதிவுரு எழுத்தர் (Record Clerk) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 09.03.2026 |
| பணியிடம் | அரியலூர் மாவட்டம் – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ariyalur.nic.in/ |
Department of Land Survey and Records Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறை வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
| பதிவுரு எழுத்தர் (Record Clerk) | 01 |
Department of Land Survey and Records Recruitment 2026 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 2026-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள பதிவுரு எழுத்தர் (Record Clerk) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், தற்கால அலுவலகப் பணிகளைக் கவனிப்பதற்குத் தேவையான அடிப்படை கணினி அறிவு (Basic Computer Knowledge) கொண்டிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் (Record Clerk) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவின் அடிப்படையில் அதிகபட்ச வயது வரம்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பொதுப் பிரிவினர் (General Category) 30 வயது வரையிலும், BC மற்றும் MBC பிரிவைச் சேர்ந்தவர்கள் 32 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். மேலும், SC மற்றும் ST பிரிவினருக்கு 35 வயது வரை விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பிரிவிற்குரிய வயது வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்து கொண்டு இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Department of Land Survey and Records Recruitment 2026 சம்பளம் விவரங்கள்
| பதவியின் பெயர் | சம்பள அளவு (ரூ.) |
| பதிவுரு எழுத்தர் (Record Clerk) | இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதார்களுக்கு மாதம் ரூ.15,900 – ரூ.58,500 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Ariyalur Land Survey and Records Department Recruitment 2026 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Ariyalur Land Survey and Records Department Recruitment 2026 விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 09.02.2026
- விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.03.2026 மாலை 05.45 மணி
Department of Land Survey and Records Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு நில அளவை பதிவேடுகள் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:
- முதலில் விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பிழையின்றிப் பூர்த்தி செய்யவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உங்கள் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ் (இருப்பின்) ஆகியவற்றின் நகல்களை இணைக்கவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அரியலூர் மாவட்ட நில அளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் (Registered Post) மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
- இறுதி நாள்: 09.03.2026 (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் அலுவலகத்தைச் சென்றடைய வேண்டும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி இயக்குநர், மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை, முதல் தளம், அறை எண்: 119, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| விண்ணப்ப படிவம் | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |








