CQAE MS Recruitment 2026 : மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் (Chief Quality Assurance Establishment – MS, Mumbai) காலியாக உள்ள 09 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk) மற்றும் Superintendent (Stores) ஆகிய பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CQAE MS Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Chief Quality Assurance Establishment (MS) முதன்மை தர உறுதி நிறுவனம் (MS) |
| காலியிடங்கள் | 09 |
| பணிகள் | MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk),Superintendent (Stores) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 27.03.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.ddpmod.gov.in/ |
CQAE MS Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு முதன்மை தர உறுதி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி (Post) | காலியிடங்கள் |
| MTS (Multi Tasking Staff) | 05 |
| LDC (Lower Division Clerk) | 03 |
| Superintendent (Stores) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CQAE MS Recruitment 2026 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
| பதவி (Post) | கல்வித் தகுதி |
| MTS (Multi Tasking Staff) | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி |
| LDC (Lower Division Clerk) | 12-ஆம் வகுப்பு தேர்ச்சி + Typing (Eng-35 wpm / Hindi-30 wpm) |
| Superintendent (Stores) | 12-ஆம் வகுப்பு + Material Management Certificate + 2 வருட அனுபவம் |
CQAE MS Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
| பதவி (Post) | வயது வரம்பு |
| MTS (Multi Tasking Staff) | 18 வயது முதல் 25 வயது வரை |
| LDC (Lower Division Clerk) | 18 வயது முதல் 27 வயது வரை |
| Superintendent (Stores) | 18 வயது முதல் 27 வயது வரை |
உயர் வயது வரம்பு தளர்வு:
- SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: +5 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்களுக்கு: +3 ஆண்டுகள் - PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: +10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) விண்ணப்பதாரர்களுக்கு: +15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: +13 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவ வீரர்களுக்கு: அரசாங்கக் கொள்கையின்படி
சம்பள விவரங்கள்
| பதவி (Post) | வயது வரம்பு |
| MTS (Multi Tasking Staff) | Level – 1 Rs.18000 – 56900/- |
| LDC (Lower Division Clerk) | Level – 2 Rs.19900 – 63200/- |
| Superintendent (Stores) | Level – 3 Rs.25500 – 81000/- |
தேர்வு செயல்முறை
மத்திய அரசு முதன்மை தர உறுதி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் திறன் தேர்வு (Trade/Skill Test) ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.02.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2026
CQAE MS Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவுத் தபால் (Registered Post) அல்லது விரைவுத் தபால் (Speed Post) மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பும் உறையின் (Envelope) மேல் பகுதியில் பெரிய எழுத்துக்களில் கீழ்க்கண்டவாறு தெளிவாகக் குறிப்பிட வேண்டும்:
- APPLICATION FOR THE POST OF ____________________ (நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்)
- CATEGORY ____________________ (உங்கள் பிரிவு: SC/ST/OBC/UR/ESM/PWBDs)
2. அனுப்ப வேண்டிய முகவரி: The Chief Quality Assurance Officer (MS) Seventh Floor, NMRL/DGQA Building Near Tiger Gate, Naval Dockyard Mumbai – 400001
3. இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
- விண்ணப்பப் படிவம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள ‘Appendix AI’ படிவத்தை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து (A4 அளவில்) முழுமையாகப் பூர்த்தி செய்து இணைக்க வேண்டும்.
- அட்மிட் கார்டு (Admit Card): ‘Appendix A II’ படிவத்தை இரண்டு பிரதிகள் (In Duplicate) பூர்த்தி செய்து இணைக்க வேண்டும்.
- சுய முகவரி இட்ட உறை: நேர்காணல் அல்லது தேர்வுக்கான அழைப்புக் கடிதம் (Call Letter) உங்களுக்குத் திரும்ப அனுப்ப ஏதுவாக, 25 செ.மீ x 10 செ.மீ அளவுள்ள ஒரு உறையில் உங்கள் வீட்டு முகவரியை எழுதி விண்ணப்பத்துடன் உள்ளே வைக்க வேண்டும்.
- புகைப்படங்கள்: மொத்தம் மூன்று சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் தேவை. ஒன்றை விண்ணப்பப் படிவத்தில் உள்ள கட்டத்தில் ஒட்ட வேண்டும். மற்ற இரண்டையும் அட்மிட் கார்டுகளில் உள்ள கட்டங்களில் ஒட்டி, அதன் மேல் உங்கள் கையெழுத்தைப் (Self-signed) போட வேண்டும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |









