CCRS Recruitment 2026: மத்திய அரசுக்கு (Central Government job) சொந்தமான சென்னை தாம்பரத்தில் உள்ள மத்திய சித்தா ஆராய்ச்சி கவுன்சில் (CCRS) நிறுவனத்தில் காலியாக உள்ள 14 Laboratory Attendant (ஆய்வக உதவியாளர்), Research Officer (Siddha) (ஆராய்ச்சி அலுவலர் – சித்தா), Research Assistant (Chemistry) (ஆராய்ச்சி உதவியாளர் – வேதியியல்), மற்றும் Medical Laboratory Technologist (MLT) (மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.
CCRS Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Central Council for Research in Siddha (CCRS) மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில் (CCRS) |
| காலியிடங்கள் | 14 |
| பணிகள் | Research Officer (Siddha) (ஆராய்ச்சி அலுவலர் – சித்தா) Research Assistant (Chemistry) (ஆராய்ச்சி உதவியாளர் – வேதியியல்) Medical Laboratory Technologist (MLT) (மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்) Laboratory Attendant (ஆய்வக உதவியாளர்) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 31.03.2026 |
| பணியிடம் | சென்னை தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://siddhacouncil.com/ |
CCRS Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
சென்னை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் வேலைவாய்ப்பு 2026 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி (Post Name) | காலியிடங்கள் |
| Research Officer (Siddha) (ஆராய்ச்சி அலுவலர் – சித்தா) | 02 |
| Research Assistant (Chemistry) (ஆராய்ச்சி உதவியாளர் – வேதியியல்) | 02 |
| Medical Laboratory Technologist (MLT) (மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்) | 09 |
| Laboratory Attendant (ஆய்வக உதவியாளர்) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CCRS Recruitment 2026 கல்வித் தகுதி
| பதவி (Post Name) | கல்வி தகுதி (Qualification) |
| Research Officer (Siddha) (ஆராய்ச்சி அலுவலர் – சித்தா) | சித்த மருத்துவத்தில் முதுகலை பட்டம் (MD – Siddha) + மாநில/மத்திய மருத்துவ வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். |
| Research Assistant (Chemistry) (ஆராய்ச்சி உதவியாளர் – வேதியியல்) | சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் + 2 ஆண்டுகள் அனுபவம் (அல்லது) முதுகலை பட்டம். |
| Medical Laboratory Technologist (MLT) (மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்) | Bachelor’s Degree in Medical Laboratory Science + 2 ஆண்டுகள் அனுபவம். |
| Laboratory Attendant (ஆய்வக உதவியாளர்) | 12-ஆம் வகுப்பு (+2 Science) + கணினி சான்றிதழ் படிப்பு + ஆய்வக அனுபவம். |
Central Council for Research in Siddha Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
| பதவி (Post Name) | வயது வரம்பு |
| Research Officer (Siddha) (ஆராய்ச்சி அலுவலர் – சித்தா) | 18 வயது முதல் – 40 வயது வரை |
| Research Assistant (Chemistry) (ஆராய்ச்சி உதவியாளர் – வேதியியல்) | 18 வயது முதல் – 30 வயது வரை |
| Medical Laboratory Technologist (MLT) (மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்) | 18 வயது முதல் – 35 வயது வரை |
| Laboratory Attendant (ஆய்வக உதவியாளர்) | 18 வயது முதல் – 25 வயது வரை |
வயது தளர்வு:
அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் வயது வரம்பு தளர்வு விவரங்கள்:
- SC/ ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PwBD (Gen/ EWS): 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST): 15 ஆண்டுகள்
- PwBD (OBC): 13 ஆண்டுகள்
Central Council for Research in Siddha Recruitment 2026 சம்பள விவரங்கள்
| பணியின் பெயர் | சம்பளம் (ரூ.) |
| Research Officer (Siddha) (ஆராய்ச்சி அலுவலர் – சித்தா) | ரூ.56,100 – ரூ.1,77,500 |
| Research Assistant (Chemistry) (ஆராய்ச்சி உதவியாளர் – வேதியியல்) | ரூ.35,400 – ரூ.1,12,400 |
| Medical Laboratory Technologist (MLT) (மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்) | ரூ.35,400 – ரூ.1,12,400 |
| Laboratory Attendant (ஆய்வக உதவியாளர்) | ரூ.19,900 – ரூ.63,200 |
Central Council for Research in Siddha Recruitment 2026 தேர்வு செயல்முறை
சென்னை மத்திய சித்த ஆராயர்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
CCRS Recruitment 2026 முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.01.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2026
CCRS Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
சென்னை மத்திய சித்த ஆராயர்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 31.03.2026 தேதிக்குள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதற்கான வழிமுறைகள் இதோ:
- விண்ணப்பதாரர்கள் https://siddhacouncil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
- பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, உரிய இடங்களில் கையொப்பமிட வேண்டும்.
- விண்ணப்பத்துடன் உங்களது கல்விச் சான்றிதழ்கள், வயதுச் சான்று, அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைக்கவும்.
- விண்ணப்பம் வைக்கப்பட்ட உறையின் மேல் “Application for the post of [பணியின் பெயர்]” என்று பெரிய எழுத்துக்களில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். (உதாரணம்: Application for the post of Research Officer (Siddha)).
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை விரைவு தபால் (Speed Post) மூலம் மட்டுமே கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Director General, Central Council for Research in Siddha, Ministry of Ayush, GST Road, Tambaram Sanatorium, Chennai – 600047.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் (Documents to be Enclosed)
அனைத்து சான்றிதழ் நகல்களிலும் விண்ணப்பதாரர் சுய சான்றொப்பம் (Self-attested) செய்திருக்க வேண்டும்.
- குறிப்பிடப்பட்ட கட்டணத்திற்கான அசல் டிமாண்ட் டிராஃப்ட் (Original DD) இணைக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படத்தைப் ஒட்ட வேண்டும்.
- பிறந்த தேதியை உறுதிப்படுத்த 10-ஆம் வகுப்பு (SSLC/Matriculation) மதிப்பெண் பட்டியல் அல்லது சான்றிதழ் நகல்.
- பதவிக்குத் தேவையான அடிப்படை மற்றும் உயர் கல்வித் தகுதிகளுக்கான அனைத்து சான்றிதழ் நகல்களும்.
- பணி அனுபவம் கோரப்பட்டிருந்தால், அது தொடர்பான முறையான அனுபவச் சான்றிதழ் நகல்கள்.
- மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர் என்றால், அதற்கான உரிய மருத்துவச் சான்றிதழ் நகல்.
முக்கிய குறிப்பு: சாதாரண தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. எனவே, கண்டிப்பாக Speed Post மூலம் மட்டுமே அனுப்பவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







