C-DAC Recruitment 2025

ரூ.30,000 சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு கணினி மேம்பாட்டு மையத்தில் வேலை! – 101 காலியிடங்கள் C-DAC Recruitment 2025

C-DAC Recruitment 2025: மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறையின் கீழ் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (சி-டாக் ) செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து செயல்படும் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (சி-டாக் ) ஆனது காலியாக உள்ள 101 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம்
Centre for Development of
Advanced Computing (C-DAC)
காலியிடங்கள்101
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.02.2025
பணியிடம்சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://careers.cdac.in/

சென்னை மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடம்
திட்ட அசோசியேட்31
திட்டப் பொறியாளர்30
திட்ட டெக்னிஷியன்30
சீனியர் திட்ட பொறியாளர்10

இதில் மொத்தம் 101 காலிப்பணியிடங்கள் உள்ளன.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

திட்ட அசோசியேட்

  • B.E./B.Tech அல்லது அதற்கு சமமான பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான CGPA உடன் (அல்லது)
  • M.E./M.Tech அல்லது அதற்கு சமமான பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது)
  • அறிவியல்/கணினி பயன்பாடுகள் அல்லது தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

திட்டப் பொறியாளர்

  • B.E./B.Tech அல்லது அதற்கு சமமான பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான CGPA உடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது)
  • M.E./M.Tech அல்லது அதற்கு சமமான பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல்/கணினி பயன்பாடுகள் அல்லது தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது)
  • அதற்கு சமமான CGPA உடன் அல்லது தொடர்புடைய துறையில் முனைவர் பட்டம் (PhD) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

திட்ட டெக்னிஷியன்

  • தொடர்புடைய துறையில் தொழில் பயிற்சி நிலையம் (ITI) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • தொடர்புடைய துறையில் பொறியியல் டிப்ளோமா அல்லது கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் / கணினி பயன்பாடுகள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • தொடர்புடைய துறையில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சீனியர் திட்ட பொறியாளர்

  • B.E./B.Tech அல்லது அதற்கு சமமான பட்டம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான CGPA உடன் (அல்லது)
  • M.E./M.Tech அல்லது அதற்கு சமமான பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது)
  • அறிவியல்/கணினி பயன்பாடுகள் அல்லது தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்சம்பளம்
திட்ட அசோசியேட்ரூ. 30,000
திட்டப் பொறியாளர்ரூ. 37,416
திட்ட டெக்னிஷியன்ரூ. 26,666
சீனியர் திட்ட பொறியாளர்ரூ. 70,750 முதல்
ரூ. 1,16,666

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேவைப்பட்டால் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

சென்னை மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 01.02.2025 முதல் 20.02.2025 தேதிக்குள் https://careers.cdac.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top