Sports Authority of India Recruitment 2026: மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (Sports Authority of India – SAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, உதவி பயிற்சியாளர் (Assistant Coaches) பணியிடங்களுக்கு மொத்தம் 323 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹35,400 முதல் ₹1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.04.2026க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு யார் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் கீழே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Sports Authority of India Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Sports Authority of India (SAI) இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) |
| காலியிடங்கள் | 323 |
| பணி | Assistant Coaches (உதவி பயிற்சியாளர்கள்) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 21.04.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு & இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sportsauthorityofindia.nic.in/sai_new/ |
Sports Authority of India Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆட்சேர்ப்பு 2026 ஆனது கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பயார் | காலியிடங்கள் |
| Assistant Coaches (உதவி பயிற்சியாளர்கள்) | 323 |
| மொத்தம் | 323 |
விளையாட்டுத் துறை சார்ந்த காலிப் பணியிடங்கள்:
| Sports Discipline | விளையாட்டு பிரிவு | Vacancies (காலியிடங்கள்) |
| Swimming | நீச்சல் | 26 |
| Athletics | தடகளம் | 28 |
| Cycling | மிதிவண்டிப் போட்டி | 12 |
| Gymnastics | ஜிம்னாஸ்டிக்ஸ் | 12 |
| Wrestling | மல்யுத்தம் | 22 |
| Canoeing | கனோயிங் (தோணி ஓட்டம்) | 7 |
| Judo | ஜூடோ | 6 |
| Rowing | துடுப்பு படகு போட்டி | 11 |
| Shooting | துப்பாக்கிச் சுடுதல் | 28 |
| Boxing | குத்துச்சண்டை | 19 |
| Fencing | வாள்வீச்சு | 11 |
| Weightlifting | பளுதூக்குதல் | 10 |
| Taekwondo | டேக்வாண்டோ | 11 |
| Archery | வில்வித்தை | 12 |
| Table Tennis | மேஜைப்பந்து | 14 |
| Badminton | இறகுப்பந்து | 16 |
| Tennis | டென்னிஸ் | 8 |
| Basketball | கூடைப்பந்து | 12 |
| Volleyball | கைப்பந்து | 10 |
| Field Hockey | வளைதடிப் பந்தாட்டம் | 13 |
| Football | கால்பந்து | 12 |
| Handball | கைப்பந்து (Handball) | 6 |
| Kabaddi | கபடி | 6 |
| Kho-Kho | கோ-கோ | 2 |
| Sepak Takraw | செபக் தக்ரா | 3 |
| Wushu | வுஷூ | 6 |
| Total | மொத்தம் | 323 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Sports Authority of India Recruitment 2026 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:
- SAI NS-NIS (பாட்டியாலா) அல்லது அங்கீகரிக்கப்பட்ட இந்திய/வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் Diploma in Coaching முடித்திருக்க வேண்டும்.
- ஒலிம்பிக் / பாராலிம்பிக் / ஆசிய விளையாட்டுகள் / உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற அனுபவத்துடன், பயிற்சியாளர் சான்றிதழ் (Certificate Course in Coaching) பெற்றிருக்க வேண்டும். அல்லது துரோணாச்சார்யா விருது (Dronacharya Awardee) பெற்றவராக இருக்க வேண்டும்.
Sports Authority of India Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 Assistant Coaches (உதவி பயிற்சியாளர்கள்) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு (Upper Age Relaxation):
அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் அளிக்கப்படும் தளர்வுகள்:
- பட்டியல் சாதியினர்/பழங்குடியினருக்கு: +5 ஆண்டுகள்
- இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு: +3 ஆண்டுகள்
Sports Authority of India Recruitment 2026 சம்பள விவரங்கள்
இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 Assistant Coaches (உதவி பயிற்சியாளர்கள்) பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| நகரத்தின் வகை (City Category) | மாதாந்திர சம்பளம் (தோராயமாக) |
| Assistant Coaches (உதவி பயிற்சியாளர்கள்) | மாதம் Rs.35,400 – 1,12,400/- |
Sports Authority of India Recruitment 2026 தேர்வு செயல்முறை
இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 Assistant Coaches (உதவி பயிற்சியாளர்கள்) பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- எழுத்துத் தேர்வு (Written Examination – CBT): கணினி வழித் தேர்வு.
- பயிற்சித் திறன் தேர்வு (Coaching Ability Test): கள ஆய்வு மற்றும் செயல்முறைத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்:
| வகுப்பு (Category) | கட்டணம் |
| Others (General/OBC/EWS) | Rs.2,500/- |
| SC / ST / Ex-Servicemen | Rs.2,000/- |
முக்கிய தேதிகள்:
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.03.2026
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2026
Sports Authority of India Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், 23.03.2026 முதல் 21.04.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க, https://sportsauthorityofindia.nic.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, “New Registration” பட்டனைக் கிளிக் செய்து, முதலில் Register செய்ய வேண்டும். Register செய்த பிறகு, உள்நுழைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடன் உங்கள் விண்ணப்பத்தைச் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் குறித்த மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
| அரசு வேலை WhatsApp Channel | உடனே சேருங்கள் |
| இன்றைய அரசு வேலை | Click Here |







