IACS Recruitment 2026: மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, 10 உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] ஆகிய பதவிகளில் மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 15.05.2026-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IACS Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | IACS – Indian Association for the Cultivation of Science IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் |
| காலியிடங்கள் | 10 |
| பணிகள் | உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 15.05.2026 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.iacs.res.in/ |
IACS Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் (Post Name) | காலிப்பணியிடங்கள் (Vacancies) |
| உதவியாளர் (Assistant – Group B) | 05 |
| பல்நோக்கு பணியாளர்கள் (MTS General – Group C) | 05 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IACS Recruitment 2026 கல்வித் தகுதி
இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்விதகுதி விபரங்கள் பணியிடங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர் (Post Name) | கல்வித்தகுதி & அனுபவம் (Eligibility) |
| உதவியாளர் (Assistant – Group B) | தகுதி: இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) அனுப்பவம்: 5 ஆண்டுகள் (நிர்வாகம், ஆங்கிலம் & கணினி அறிவு) |
| பல்நோக்கு பணியாளர்கள் (MTS General – Group C) | தகுதி: 10-ஆம் வகுப்பு (Matriculation) அல்லது அதற்கு இணையானது அனுபவம்: தேவையில்லை (NA) |
IACS Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
| பதவியின் பெயர் (Post Name) | வயது வரம்பு (Age Limit) |
| உதவியாளர் (Assistant – Group B) | 30 வயதிற்கு மிகாமல் (15/05/1996-க்கு பின் பிறந்தவர்) |
| பல்நோக்கு பணியாளர்கள் (MTS General – Group C) | 18 முதல் 25 வயது வரை (15/05/2001 – 15/05/2008) |
வயது தளர்வு (Age Relaxation): SC/ST (+5 ஆண்டுகள்), OBC (+3 ஆண்டுகள்), PwBD (+10 முதல் 15 ஆண்டுகள் வரை).
சம்பள விவரங்கள்
இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான சம்பளம் விபரங்கள் பணியிடங்கள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர் (Post Name) | ஊதியம் (Salary / Basic Pay) |
| உதவியாளர் (Assistant – Group B) | Level 7: ₹44,900/- (Initial Basic Pay) |
| பல்நோக்கு பணியாளர்கள் (MTS General – Group C) | Level 1: ₹18,000/- (Initial Basic Pay) |
தேர்வு செயல்முறை
இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆரம்பகட்ட தேர்வு (Screening), எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் (Fee): SC/ST/பெண்களுக்கு ₹500/-; மற்றவர்களுக்கு ₹1,000/- (ஆன்லைனில் செலுத்த வேண்டும்).
IACS Recruitment 2026 முக்கிய தேதிகள்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.03.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2026
IACS Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.03.2026 முதல் 15.05.2026 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பும் போது, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்:
- விண்ணப்பப் படிவம்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், உங்கள் தகுதிக்கு ஆதாரமான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் (requisite documents) இணைக்கவும்.
- உறை (Envelope): அனைத்து ஆவணங்களையும் ஒரு உறையில் வைத்து சீல் (Sealed) செய்யவும்.
- குறிப்பு (Superscript): உறையின் மீது தெளிவாகப் பின்வருவனவற்றை எழுதவும்:“APPLICATION FOR THE POST OF (பதவியின் பெயர் மற்றும் விளம்பர எண்)”
- முகவரி: கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் (Post) மூலம் அனுப்பவும்:
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Registrar, Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S. C. Mullick Road, Kolkata – 700032.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |








