DCPU Chennai Recruitment 2026: தமிழ்நாடு அரசு, சென்னை வடக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) காலியாக உள்ள 01 கணக்காளர் (Accountant) பணியிடத்தை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் (B.Com) அல்லது கணிதத்தில் (B.Sc Mathematics) இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்களைச் சரிபார்த்து, வரும் 23.03.2026-ஆம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
DCPU Chennai Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | தமிழ்நாடு அரசு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் Chennai District Child Protection Unit |
| காலியிடங்கள் | 01 |
| பணிகள் | கணக்காளர் (Accountant) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 23.03.2026 |
| பணியிடம் | சென்னை – தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chennai.nic.in/ |
Tamilnadu DCPU Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு, சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (Chennai District Child Protection Unit – DCPU) ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி பெயர் | காலியிடங்கள் |
| கணக்காளர் (Accountant) | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DCPU Chennai Recruitment 2026 கல்வித் தகுதி
சென்னை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) 2026-ஆம் ஆண்டிற்கான கணக்காளர் (Accountant) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் வணிகவியல் (B.Com) அல்லது கணிதத்தில் (B.Sc Mathematics) இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
DCPU Chennai Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பிக்கும் தேதியின்படி, விண்ணப்பதாரரின் வயது வரம்பு பின்வருமாறு இருக்க வேண்டும்:
- குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது: 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
DCPU Chennai Recruitment 2026 சம்பளம் விவரங்கள்
சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) காலியாக உள்ள கணக்காளர் (Accountant) பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாத ஊதியமாக Rs.18,536/- வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 13.03.2026
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.03.2026
DCPU Chennai Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2026-க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை சென்னை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.nic.in/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சுய-சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களையும் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்:
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை – வடக்கு, எண்:300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ் சென்னை – 600010
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |







