Sainik School Amaravathinagar Recruitment 2026

10வது, 12வது தேர்ச்சி போதும்.. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் சைனிக் பள்ளியில் வேலை – ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! Sainik School Amaravathinagar Recruitment 2026

Sainik School Amaravathinagar Recruitment 2026: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், அமராவதிநகரில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளியில் (Sainik School) தற்போது பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் General Employee (MTS), PEM/PTI – Matron (பெண்கள் மட்டும்) மற்றும் Ward Boys ஆகிய பிரிவுகளில் மொத்தம் 17 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மாணவர்களைப் பராமரிப்பதில் ஆர்வமும் உடல்தகுதியும் கொண்ட இந்தியக் குடிமக்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 முதல் 50 வயதிற்குட்பட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் மற்றும் வரைவோலையுடன் (Demand Draft) வரும் 31.03.2026-ம் தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்சைனிக் பள்ளி அமராவதிநகர்
Sainik School in Tamil Nadu
காலியிடங்கள்17
பணிGeneral Employee (MTS)
PEM/PTI – Matron (Female)
Ward Boys
கடைசி தேதி31.03.2026
பணியிடம்திருப்பூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.sainikschoolamaravathinagar.edu.in/

அமராவதிநகர் சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2026 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி (Post Name)காலியிடங்கள்
General Employee (MTS)13
PEM/PTI – Matron (பெண்கள் மட்டும்)01
Ward Boys03

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவி (Post Name)கல்வித் தகுதி (Educational Qualification)
General Employee (MTS)10-ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது அதற்கு சமமான தகுதி)
PEM/PTI – Matron (பெண்கள் மட்டும்)12-ஆம் வகுப்பு தேர்ச்சி + ஆங்கிலப் பேச்சுத் திறன் + மாணவர் பராமரிப்பு & Housekeeping அனுபவம்
Ward Boys10-ஆம் வகுப்பு தேர்ச்சி + தமிழ், ஆங்கிலம், ஹிந்தி பேச்சுத் திறன் + மாணவர் பராமரிப்பு அனுபவம்

சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 50 வயது வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி (Post Name)சம்பளம் (மாதம்)
General Employee (MTS)₹18,000 – ₹56,900
PEM/PTI – Matron (பெண்கள் மட்டும்)₹25,000 (நிலையான ஊதியம்)
Ward Boys₹22,000 – ₹25,000

சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளில் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்ப்பட உள்ளனர்

  1. Written Exam
  2. Skill/Trade tests
  3. Personal Interview

உடல் தகுதி: விண்ணப்பதாரர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் (Medically Fit) இருத்தல் அவசியம்.

முன்னுரிமை: உறைவிடப் பள்ளிகள் (Residential Schools) அல்லது பெரிய கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பிரிவு (Category)கட்டணம் (Fees)
பொது மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (General & OBC)₹500/-
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் (SC/ST)₹200/-

டிடி (DD) எடுக்க வேண்டிய விவரங்கள்:

வரைவோலை (Demand Draft) எடுக்கும்போது பின்வரும் பெயரையும், வங்கியின் கிளையையும் சரியாகக் குறிப்பிடுவது அவசியம்:

  • யாருடைய பெயரில் எடுக்க வேண்டும் (Favor of): ‘PRINCIPAL, SAINIK SCHOOL, AMARAVATHINAGAR’
  • பணம் செலுத்த வேண்டிய வங்கி (Payable at): State Bank of India (SBI), Amaravathinagar.
  • வங்கி கிளை குறியீடு (Branch Code): 2191.
  • இடம்: உடுமலைப்பேட்டை தாலுகா, திருப்பூர் மாவட்டம்.

முக்கிய குறிப்புகள்:

  1. விண்ணப்பத்துடன் இணைத்தல்: வங்கியில் டிடி (DD) எடுத்த பிறகு, அதன் அசல் பிரதியை (Original DD) உங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.
  2. டிடி-யின் பின்புறம்: பாதுகாப்பிற்காக, டிடி-யின் பின்புறத்தில் உங்களது பெயர், முகவரி மற்றும் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை பென்சிலால் அல்லது பேனாவால் தெளிவாக எழுதவும்.
  3. செல்லுபடியாகும் காலம்: டிடி எடுத்த தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அது சம்பந்தப்பட்ட அலுவலகத்தைச் சென்றடைவதை உறுதி செய்யவும்.
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.03.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2026

சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள், இப்பணியிடங்களுக்குத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்கள், இப்பணியிடங்களுக்குத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவம் பள்ளியின் இணையதளமான www.sainikschoolamaravathinagar.edu.in இல் கிடைக்கும்.அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

1. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Principal, Sainik School Amaravathinagar, Amaravathinagar, Pin – 642102, Udumalpet Taluk, Tiruppur District, Tamil Nadu.

2. விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

உங்கள் விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களைச் சரியாக இணைப்பதை உறுதி செய்யவும்:

  • புகைப்படம்: விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.
  • கல்விச் சான்றுகள்: 10-ஆம் வகுப்பு முதல் நீங்கள் பெற்றுள்ள உயர்கல்வி வரை அனைத்து மதிப்பெண் பட்டியல்கள் (Mark Sheets) மற்றும் சான்றிதழ்களின் நகல்கள்.
  • அனுபவச் சான்றிதழ்: பணி அனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ் அல்லது Testimonial நகல்கள்.
  • சுய கையொப்பம் (Self Attestation): இணைக்கப்படும் அனைத்துச் சான்றிதழ் நகல்களிலும் உங்கள் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணம் (DD): மேற்சொன்ன விவரப்படி எடுக்கப்பட்ட அசல் டிடி (Demand Draft) இணைக்கப்பட வேண்டும்.
    • Gen / OBC: ₹500
    • SC / ST: ₹200
  • ஜாதிச் சான்றிதழ்: SC / ST விண்ணப்பதாரர்கள் கட்டணச் சலுகை பெற, தங்களின் ஜாதிச் சான்றிதழ் நகலை அவசியம் இணைக்க வேண்டும்.

3. அஞ்சல் கவரின் மேல் எழுத வேண்டியவை:

விண்ணப்பம் அடங்கிய தபால் உறையின் (Envelope) மேல், நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தெளிவாகவும், பெரிய எழுத்துக்களிலும் (BOLD) எழுத வேண்டும். உதாரணம்: “APPLICATION FOR THE POST OF GENERAL EMPLOYEE (MTS)”

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top